Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: இதை செய்தால் போதும், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தலாம்.. பைனலில் இந்தியா வெல்ல வழி என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் 15 முறை மோதி இருக்கின்றன.

இதில் இந்தியா 12 முறையும், பாகிஸ்தான் மூன்று முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஏற்கனவே இந்தியா வீழ்த்திய நிலையில், ஹாரிக் வெற்றியை பெரும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

Asia cup 2025 India vs Pakistan

ஆனால் பாகிஸ்தான் அணி சூப்பர் ஃபோர் சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக நல்ல முறையில் பந்து வீசி இருக்கிறது. இதனால் பைனலில் நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்றால் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணியின் பலமே அதன் வேகப்பந்து வச்சு தான். குறிப்பாக ஷாஹீன் ஆப்ரிடியை நம்பி தான், அந்த அணி இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளும் அபிஷேக் ஷர்மா அவருடைய முதல் பந்திலேயே பவுண்டரி சிக்ஸர் ஆகியவை அடித்தார். இதனால் ஃபைனலில் மீண்டும் அவருடைய பந்தை அடித்து ஆட முற்பட்டால் அது பாகிஸ்தானின் உத்வேகத்தை குறைத்து விடும்.

இதேபோன்று இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் மீண்டும் தொடக்க வீரர்கள் 10 ஓவருக்கு 90 ரன்கள் குவிக்க வேண்டும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும். இதேபோன்று நடு வரிசையில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அதிரடி காட்டி ரன்கள் சேர்க்க வேண்டும்.

சூரியகுமார் யாதவ் வழக்கம்போல் 30 பந்துகளில் 60 ரன்கள் நடுவரிசையில் சேர்த்தால் பாகிஸ்தான் அணியால் வெற்றியை பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும். இதேபோன்று இந்த தொடரில் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஃபைனலில் பும்ரா தன்னுடைய மேஜிக்கை வெளிப்படுத்தினால் பாகிஸ்தான அணி கதை அவ்வளவுதான். இதேபோன்று குல்தீப், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் இணைந்து பாகிஸ்தானின் பேட்டிங்கை கட்டுப்படுத்த வேண்டும். இது அனைத்தும் நடந்தால் பாகிஸ்தானை மீண்டும் இறுதிப் போட்டியில் எளிதில் விழித்து விடலாம்.

Story first published: Friday, September 26, 2025, 13:32 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+