For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: பாகிஸ்தானுக்கு ஆரம்பமே சரியில்லை.. அமரும் இடத்தில் பாம்பு.. போட்டிக்கு முன்பே ரிசல்ட்?

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் அணிக்கு ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அமரும் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15) இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடைபெறுகிறது. இதற்காக நேற்றைய தினம் பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

IND vs PAK Giant Snake Found in Pakistan s Dugout Ahead of T20 World Cup 2026 Clash Against India

டக் அவுட்டில் பாம்பு

பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அமரும் இடமான டக் அவுட் (Dug Out) பகுதியில், திடீரென ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மைதான ஊழியர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு, அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள், போட்டிக்கு முன்பே பாகிஸ்தான் கூடாரத்தில் பாம்பு புகுந்ததை கிண்டல் அடித்து வருகின்றனர். போட்டிக்கு முன்பே பாகிஸ்தான் அணிக்கான முடிவு தெரிந்து விட்டது என்று கேலியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி யாருக்கு?

பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் புறக்கணிப்பு நாடகங்களுக்குப் பிறகு இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் தோல்வியே சந்திக்காமல் சமபலத்துடன் உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

வரலாறு இந்தியா பக்கம்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தித் தன்னம்பிக்கையுடன் உள்ளது. அதேபோல பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவை வீழ்த்தியுள்ளது. எனினும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுவரை நடந்த 8 போட்டிகளில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியிலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 15, 2026, 10:03 [IST]
Other articles published on Feb 15, 2026
English summary
IND vs PAK: A snake was spotted in the Pakistan dugout during practice, sparking funny comments on social media before their T20 World Cup match against India. Some fans says result came before the match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+