Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: “இன்னைக்கு என்னெல்லாம் பண்ணப் போறானோ”.. தெறிக்கவிடும் இந்தியா - பாகிஸ்தான் மீம்ஸ்

டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பரம எதிரியான பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியதை விட, இணையத்தில் விதவிதமான மீம்ஸ்களைப் பதிவிட்டுத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும், பாகிஸ்தான் அணியின் தோல்வியையும் வைத்து இணையவாசிகள் உருவாக்கியுள்ள மீம்ஸ்கள் ஒவ்வொன்றும் ரகளையாக உள்ளன.

IND vs PAK India vs Pakistan Memes Set Social Media on Fire after 61 run victory in T20 World Cup 2026

1. இன்னும் நாங்க தான் போட்டியா?

உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 16-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதை வைத்து, மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் வசனமான, "நீ என்ன நெனச்சுட்டு இருக்க.. நமக்குள்ள இன்னும் ஏதோ போட்டி இருக்கு, பகை இருக்குனு நெனச்சுட்டு இருக்கியா?" என்ற மீம்ஸ் மூலம் பாகிஸ்தானின் தற்போதைய நிலையை ரசிகர்கள் வாரி எடுத்துள்ளனர்.

2. அப்போ நீ போட்டி இல்லையா?

பாபர் அசாம் 5 ரன்களில் அவுட் ஆனதை வைத்து, பருத்திவீரன் சித்தப்பு சரவணன் பேசும், "அப்போ நீ எம்புள்ளைக்கு (விராட் கோலி) போட்டி இல்லையா?" என்ற மீம்ஸ் பாபர் அசாமை கலாய்த்துத் தள்ளுகிறது.

3. மும்பை இந்தியன்ஸ் கதறல்

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டு அரைசதங்கள் விளாசி இருக்கிறார் இஷான் கிஷன். ஆனால், கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுவித்து இருந்தது. அதை கிண்டல் செய்யும் விதமாக, சூரியவம்சம் படத்தில் பெரிய சரத்குமார் தன் மகனை ஏக்கமாகப் பார்ப்பது போல மீம்ஸ் போட்டு, "மிஸ் பண்ணிட்டோமே!" என மும்பை இந்தியன்ஸ் சார்பாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

4. கம்பீர் ரியாக்ஷன் - வடிவேலு மீம்

இந்தப் போட்டியில் திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து சோதித்தார். அவரது நிதானமான ஆட்டத்தைக் கண்டு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுப்பாகி இருப்பார் என்பதை உணர்த்த, "இன்னைக்கு என்னலாம் பண்ண போறானோ" என்று வடிவேலு பயந்து அழுவது போன்ற மீம்ஸ் டிரெஸ்ஸிங் ரூம் கச்சேரியை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.

5. எங்கடா இருக்க?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் 'டக் அவுட்' ஆனதைப் பார்த்து, "சுப்மன் கில்.. எங்கடா இருக்க?" என்று மீண்டும் சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என தேடுவது போன்ற மீம்ஸ் பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Monday, February 16, 2026, 11:39 [IST]
Other articles published on Feb 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+