Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியக்கோப்பை.. டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு.. ஹர்திக் காயம்.. பிளேயிங் லெவனில் என்ன மாற்றம்?

துபாய்: ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்துள்ளதால், பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. 41 ஆண்டு கால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை பைனலில் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் நடந்துள்ளன.

IND vs PAK

அதில் குரூப் போட்டி மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி வென்றுள்ளது. இதனால் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

இதன்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். இந்த பிட்ச் விளையாட விளையாட நன்றாக மாறும் என்று நினைக்கிறேன். நாங்கள் தொடர்ந்து முதல் பேட்டிங் செய்திருக்கிறோம். இன்று சேஸிங் செய்ய விரும்புகிறோம். மைதான ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி இருக்கின்றனர்.

கடந்த சில போட்டிகளாக நாங்கள் விளையாடி வரும் கிரிக்கெட் சிறப்பாக அமைந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு திடீரென ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடவில்லை. அதனால் பும்ரா, சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் ஆடிய அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் ராணா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பினோம். இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக ஆர்வமாக இருக்கிறோம். இதுவரை எங்களின் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இன்று வெளிப்படும் என்று நம்புகிறேன். பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக இதே பிட்சில் விளையாடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்கரவர்த்தி

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஃபர்ஹான், ஃபகர் ஜமான், சயீம் அயூப், சல்மான் ஆகா, ஹுசைன் டலத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், அப்ரார் அஹ்மத்

Story first published: Sunday, September 28, 2025, 19:37 [IST]
Other articles published on Sep 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+