Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: நான் ஒரு ஆள் போதும்.. பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இஷான்.. யுவராஜ் சாதனை முறியடிப்பு

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தாலும், சக தொடக்க வீரர் இஷான் கிஷன் "நான் ஒரு ஆள் போதும்" என்று பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 27 பந்துகளில் அரைசதம் கடந்து, முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையையும் முறியடித்தார்.

முதல் ஓவரில் அதிர்ச்சி வைத்தியம்

கொழும்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் சல்மான் அலி ஆகாவைக் கொண்டு முதல் ஓவரை வீச வைத்தது. இந்தத் திடீர் வியூகத்தில் சிக்கிய அபிஷேக் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

IND vs PAK Ishan Kishan Smashes 27-Ball Fifty vs Pakistan in T20 World Cup 2026 Breaks Yuvraj Singh Record

இஷான் கிஷன் அதிரடி ஆட்டம்

முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் கொஞ்சமும் பதற்றப்படவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கிய அவர், மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரி மழை பொழிந்தார். ஷாகின் அப்ரிடி, அப்ரார் அகமது என பாகிஸ்தானின் முக்கியப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்தார்.

இஷான் கிஷன் சாதனை அரைசதம்

ஒரு கட்டத்தில் 7வது ஓவரை அப்ரார் அகமது வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் நேராக பவுண்டரிக்கு விரட்டி, வெறும் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் இஷான் கிஷன். அவர் அரைசதம் அடித்ததும், இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் என அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர். அடுத்த பந்தையும் அவர் இன்சைட்-அவுட் ஷாட் மூலம் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

யுவராஜ் சிங் சாதனை முறியடிப்பு

இந்த அரைசதத்தின் மூலம், இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங்கின் சாதனையை இஷான் கிஷன் பின்னுக்குத் தள்ளியுள்ளார். யுவராஜ் சிங் 2012ல் 29 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது இஷான் கிஷன் 27 பந்துகளில் அரைசதம் அடித்து அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டிகளில் அதிவேக அரைசதங்கள் (பந்துகளின் அடிப்படையில்):

23 - முகமது ஹபீஸ் (அகமதாபாத், 2012)
24 - அபிஷேக் சர்மா (துபாய், 2025)
27 - இஷான் கிஷன் (கொழும்பு, 2026)*
29 - யுவராஜ் சிங் (அகமதாபாத், 2012)

பின்னர் இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 8.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து இருந்தது.

Story first published: Sunday, February 15, 2026, 19:47 [IST]
Other articles published on Feb 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+