Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: 8-0 என வென்ற இந்தியா.. பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டம்.. பல்வேறு சாதனைகள் உடைப்பு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா டி20 கிரிக்கெட் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். சர்வதேச t20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து எட்டு முறை சேஸிங்கில் வென்றிருக்கிறது.

Ind vs Pak

பாகிஸ்தானுக்கு எதிராக சேஸிங் செய்யும் போது கடைசி எட்டு முறை இந்தியா வென்றுள்ளது. தாய்லாந்துக்கு எதிராக மலேசியாவில் இதே போல ஒரு ரெக்கார்டை வைத்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டு விளையாடும் அணிகளுக்குள் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை ஆகும்.

இதே போன்று துபாயில் 172 ரன்களை இந்திய அணி வெற்றிகரமாக துரத்தியதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இந்தியா துரத்திய அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதே போன்று பாகிஸ்தானுக்கு எதிராக அபிசேக் 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக 29 பந்துகளில் யுவராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு அரை சதம் அடித்த சாதனையை அபிஷேக் ஷர்மா முறியடித்து இருக்கின்றார்.

இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா கில், முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் அடித்திருந்தார்கள். இது பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கப்பட்ட இந்தியாவின் அதிக ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆகும். இதுபோன்று அபிஷேக் பாகிஸ்தானுக்கு எதிராக 74 ரன்கள் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் என்று பெருமையை அபிஷேக் பெற்று இருக்கிறார்.

அபிஷேக் 74 ரன்கள் எடுத்த நிலையில் கம்பீர் 75 ரன்கள் அடித்திருந்தார். இதே போன்று பாகிஸ்தான் எதிராக இந்த ஆட்டத்தில் இந்திய அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது. இது பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச பவர்பிளே ஸ்கோராகும். இது போன்று நேற்று இந்திய அணி 5 கேட்ச் வாய்ப்பை வீணடித்தது. ஒரு போட்டியின் இந்தியா இத்தனை வாய்ப்புகளை வீணடித்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா நான்கு வாய்ப்புகளும் தவறவிட்டது.

Story first published: Monday, September 22, 2025, 7:30 [IST]
Other articles published on Sep 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+