Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: தோல்வியை ஏற்கவே முடியவில்லை.. பாகிஸ்தான் வீரர்களுக்கு ராடு இறக்கிய மோஹ்சின் நக்வி

மும்பை: இந்தியாவிடம் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தக் தோல்வி அவரை மிகவும் கோபமடையச் செய்தது, உடனடியாக அணி மேலாளருக்கு கடுமையான செய்தியை அவர் அனுப்பியுள்ளார்.

நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ள மொஹ்சின் நக்வி, ஆர். பிரேமதாசா மைதானத்தில் இந்தப் போட்டியைக் கண்டுகளித்தார். 176 ரன்கள் இலக்கை துரத்தி, பாகிஸ்தான் தனது ஐந்தாவது விக்கெட்டை இழந்த 12ஆவது ஓவர் வரைதான் அவர் போட்டியைப் பார்த்துள்ளார். அதன் பிறகு, அவர் தனது விவிஐபி பெட்டியில் இருந்து அவசரமாக வெளியேறி, பின்னர் மைதானத்திற்கு வெளியே தனது காரில் ஏறி சென்றுவிட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல்பாட்டை அவர் கடுமையாக சாடியுள்ளார். இந்த தோல்லியை "புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும், மூத்த பிசிபி அதிகாரி மூலம் அணி மேலாளர் நவேத் அக்ரம் சீமாவுக்கு நக்வி ஒரு செய்தியை அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு, பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊதியம் குறைப்பு மற்றும் வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதி கிடையாது போன்ற முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்தது.

ஆனால், கடைசி நேரத்தில் அது அமல்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை விட, போராடாமல் இந்தியாவிடம் சரணடைந்தே மோஷின் நக்வி கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த தொடரில், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை பாகிஸ்தான் வெல்லாவிட்டால், கடும் தண்டனைகளை பாகிஸ்தான் வீரர்கள் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கடுகிறது.

முதலில் பேட் செய்த இந்திய அணி, அபிஷேக் ஷர்மா சீக்கிரமே அவுட்டான போதிலும், இஷான் கிஷனின் 40 பந்துகளில் 77 ரன்களும், திலக் வர்மாவுடன் அவர் சேர்த்த 87 ரன் பார்ட்னர்ஷிப்பும் அணிக்கு 175 ரன்களை 7 விக்கெட் இழப்பிற்கு பெற்றுத் தந்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான், ஹர்திக் பாண்டியாவும் ஜஸ்பிரித் பும்ராவும் பந்துவீச்சில் மிரட்ட, 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. மீள முடியாமல், இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் சுருண்டது.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், வீரர்கள் தங்களின் முழுத் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை என்று தெரிவித்துள்ளார். அடுத்த சுற்றுக்குச் செல்ல குறைந்தது ஒரு புள்ளியாவது தேவைப்படும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Story first published: Tuesday, February 17, 2026, 0:00 [IST]
Other articles published on Feb 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+