Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பாகிஸ்தான் கிரிக்கெட்டை மோஷின் நக்வி சீரழித்துவிட்டார்.. இம்ரான் கான் கண்டனம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட்டை அந்த நாட்டின் வாரியத் தலைவர் மோசின் நக்வி சீரழிப்பதாக முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் கோப்பையை தாம் தான் இந்திய அணிக்கும் வழங்குவேன் என்று மோஷின் நக்வி அடம் பிடித்தார். இதனால் கடுப்பான இந்திய அணி, தங்களிடம் கோப்பையை வாங்குவதற்கு நாங்கள் சும்மாகவே ஊருக்கு சென்று விடுவோம் என்று கூறிவிட்டனர்.

Ind vs pak Moshin Naqvi Asia cup 2025

இது தற்போது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோஷின் நக்வியை கடுமையாக சாடிருக்கிறார். இது குறித்து பேசியுள்ள டெரிக் இ இன்சாப் தலைவர் மூனிஸ் இலாஹி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோசின் நக்வி, குறுகிய காலத்திலே பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்து விட்டார்.

பிரதமர் செபாஷ் ஷரிப்க்கு உண்மையிலே தைரியம் இருந்தால் மோஷின் நக்வியை அழைத்து ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என விசாரிக்க வேண்டும். மோஷின் நக்விக்கு கொஞ்சம் கூட வெட்கம் மானம் கிடையாது. உடனடியாக அவர் பதவியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து பேசியுள்ள முன்னாள் சிந்து மாகாணத்தின் ஆளுநர் ஜூபைர், பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் நீக்கப்பட்டிருப்பது மிகவும் தவறான செயல் என்றும் அவர்களுக்கு பதிலாக சல்மான் ஆகா ஹாரிஸ் போன்ற வீரர்கள் சேர்க்கப்பட்டது நியாயமே இல்லை என்றும் சாடி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், பாகிஸ்தான் அணியை எவ்வாறு மோசின் நக்வி சீரழித்து வருகிறாரோ அதே போல் பாகிஸ்தான் நாட்டை ராணுவ தளபதி அஷிம் முனீர் சீரழிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பதால் அந்நாட்டின் கடும் எதிர்ப்பு மோசின் நக்விக்கு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 1, 2025, 14:12 [IST]
Other articles published on Oct 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+