சோயப் அக்தர் குறித்து குழப்பத்தில் பாகிஸ்தான் அணி
மொஹாலி: வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தரை ஆடும் லெவன் அணியில் சேர்ப்பது குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதியும், பயிற்சியாளர் வக்கார் யூனிஸும் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணியுடனான தோல்விக்குப் பின்னர் அக்தரை ஆடும் லெவன் அணியில் அப்ரிதி சேர்க்கவில்லை. அவரது முடிவுக்கு வக்கார் யூனிஸும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய அரை இறுதிப் போட்டியில் அக்தரை சேர்ப்பதா வேண்டாமா என்பது குறித்து பெரும் விவாதம் நடந்து வருகிறதாம்.
அவரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று இம்ரான் கான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய அணி வீரர்களில் பலரும் கூட அக்தரை சேர்க்கக் கோரி வருகின்றனர். அவர்களில் உமர் குல்தான், அக்தருக்காக கடுமையாக வாதாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி்ய சாதனை அக்தரிடம் உள்ளதால் அவரை சேர்க்க வேண்டும் என்று அவர் அப்ரிதி மற்றும் வக்காரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து குல் கூறுகையில், அக்தர் இடம் பெற்றால் எனக்கு பெரும் பாரம் குறையும். அவர் இல்லாமல் இருப்பது நிச்சயம் எங்களுக்கு நெருக்கடியான விஷயம்தான் என்றார்.
ஆனால் சோயப் குறித்து அப்ரிதியும் சரி, வக்காரும் சரி நல்ல அபிப்பிராயத்தில் இல்லை என்று தெரிகிறது. அதேசமயம், அணியின் பல மூ்த்த வீரர்களும், இளம் வீரர்களும் சோயப்பை சேர்க்கக் கோரி வருவதால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது. அக்தர் ஆடினாலும் சரி, ஆடாவிட்டாலும் சரி, இந்திய பேட்டிங் வரிசை எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையிலேயே உள்ளது என்று ஏற்கனவே டோணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications