Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: தவறு செய்தாரா சூர்யகுமார்.. நாமே ரூட் போட்டு கொடுத்துட்டோமா? நோட் செய்த பாகிஸ்தான்

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் போர் கொடி தூக்கிருந்தனர். அதையும் மீறி தான் இந்த போட்டி நடைபெற்றது.

இந்த தருணத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபாரமாக வென்ற நிலையில் பரிசளிக்கும் நிகழ்ச்சிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எங்களுடைய இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம் என்றும் இந்திய ராணுவ வீரர்களுடன் தாங்கள் எப்போதுமே நிற்போம் என்றும் கூறியிருந்தார்.

suryakumar

இதைக் கேட்டவுடன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூக்குரல் எழுப்பி வரவேற்றனர். ஆனால் இந்த சம்பவம் நடைபெறும் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் யாரும் மைதானத்தில் இல்லை. இந்த நிலையில் சூரியகுமார் ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக தான் இவ்வாறு கூறியதாகவும் தற்போது பாகிஸ்தானுக்கு இந்தியாவை ரூட் போட்டு கொடுத்து விட்டதாகவும் கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெற்றி என்பது எப்போதும் கிடைக்காத ஒன்று டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் ஒருவேளை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இதேபோன்று பரிசளிப்பு நிகழ்ச்சிகள் பேசும்போது பாகிஸ்தானின் கேப்டன் சல்மான் ஆகா, அந்த நாட்டு ராணுவத்தை பாராட்டி, இந்தியாவை குறை சொல்ல மாட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை அவ்வாறு நடந்தால் அது நிச்சயம் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இருக்காதா என்று கேள்வி எழுந்துள்ளது. சூரியகுமார் சொன்ன விஷயத்தில் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் அதனை பரிசளிக்கும் நிகழ்ச்சியில் செய்யாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்திருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது அடுத்த ஆட்டத்திலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இதே போல் இந்தியாவை குறை சொல்லும் விதமாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பேசினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த தொடரில் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெல்ல வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, September 15, 2025, 15:40 [IST]
Other articles published on Sep 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+