For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: பைனலில் பார்த்துக்கிறோம்.. இந்திய அணிக்கு பாகிஸ்தான் வீரர் ஷாகின் அபிரிடி எச்சரிக்கை

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இரண்டு முறை மோதி இருக்கின்றன. அதில் இரண்டு முறையும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும், களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கடுப்பான இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவும், பாகிஸ்தானை டி20 கிரிக்கெட்டில் 12க்கு 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு பாகிஸ்தான் அணி தங்களுக்கு ஒரு போட்டியே கிடையாது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

Shaheen afridi

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் சாஹின் ஆபிரிடி, அவர்கள் சோபிக்க தவறுவது தான். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 போட்டியில் விளையாடியுள்ள சாகின் அபிரிடி மொத்தமாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதில் கடைசியாக ஸ்ரீலங்காவுக்கு எதிராக 28 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அதற்கு முன்பு இந்தியாவிற்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் அவர் மொத்தமாக 63 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இழந்த நம்பிக்கையை ஷாகின் அப்ரிடி மீட்டு இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்துள்ள ஷாஹீன் அப்ரிடி இறுதிப்போட்டியில் இன்னும் இரண்டு அணிகளும் தகுதி பெறவில்லை. பைனலுக்கு சென்ற பிறகு நாங்கள் இந்தியாவை பார்த்துக் கொள்கின்றோம். எங்களுடைய பணி ஆசிய கோப்பையை வெல்வது மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான அணி இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், வங்கதேசத்துக்கு எதிரான தங்களுடைய கடைசி சூப்பர் 4 ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் இந்தியாவும் வங்கதேசம் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை தொடரில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 24, 2025, 16:30 [IST]
Other articles published on Sep 24, 2025
English summary
Ind vs Pak- Pakistan cricketer Shaheen afridi gives warning to Team India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+