Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: பாகிஸ்தான் ரசிகர்கள் கதறல்.. அடுத்த போட்டியை இந்தியா புறக்கணித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் தேர்வு செய்தது.

20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 15 புள்ளி 5 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Ind vs Pak

இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அதே கருத்தை பாகிஸ்தான் ரசிகர்களும் கூறி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள், இந்த போட்டியை பார்ப்பதற்காக நாங்கள் பெருமளவு செலவு செய்து இருக்கின்றோம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு மோதலே இல்லாமல் போட்டி முடிவடைந்து விட்டது.

எங்களை ஏமாற்றும் வகையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு இருந்தது. இனி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது. ஒருவேளை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்றால் இந்தியா அடுத்தடுத்த போட்டிகளை புறக்கணிக்க வேண்டும். அப்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணித்தால் மட்டுமே எங்கள் அணி வெற்றி பெறும் என்று நினைக்கின்றோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் சிலர் பாபர் அசாம்,முகமது ரிஸ்வான் ஆகியோர் இருப்பதால்தான் அணி தோற்றுவிட்டதாக கூறி வந்த நிலையில், தற்போது இருவரும் இல்லாமல் அணி என்ன கிழித்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும், வங்கதேசம் ஆப்கானிஸ்தானை விட நாம் மோசமாக செயல்பட்டு வருகிறோம் என்றும் அந்த அணி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியா அனைத்து விதத்திலும் பலமான அணியாக விளங்குவதாகவும், உண்மையிலே அவர்கள் உலகச் சாம்பியன் என்பதை நிரூபித்து விட்டார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இல்லாமலே இந்த வெற்றியை இந்தியா சாத்தியமாக்கி இருப்பதையும் பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Story first published: Monday, September 15, 2025, 15:07 [IST]
Other articles published on Sep 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+