Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: உங்களுக்கு பேசவே அருகதை கிடையாது.. இந்தியாவுக்கு ஆதரவாக நின்ற பாகிஸ்தான் ரசிகர்கள்

லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அந்நாட்டு ரசிகர்களே கண்டனம் தெரிவித்து விமர்சித்திருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை லீக்சுற்று,சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டி என மூன்று முறை மோதியது.

இதில் மூன்றுமே இந்திய அணி தான் வெற்றி பெற்றார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் இந்தியாவை வம்பு இழுக்கும் வகையில் ஈடுபட்டனர். இதனால் கடுப்பாகி இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இது குறித்து வெளிப்படையாகவே புகார் அளித்த அபிஷேக் ஷர்மா பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்று வம்பு இழுத்ததாகவும் அதற்கு தனது பேட் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் கூறினார்.

Ind vs Pak

இதுபோன்று இறுதிப்போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வைத்த திலக் வர்மாவும், இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இந்த செயலுக்கு அந்நாட்டு ரசிகர்களை கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்கள், களத்தில் பேட் மட்டும் தான் பேச வேண்டுமே தவிர வாய் பேசக்கூடாது.

இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில் இந்திய வீரர்களை திட்ட அருகதையே கிடையாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை சரியில்லை என்றும் ஒரு நல்ல கேப்டன் தனது வீரர்களை கண்டித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறுவார் என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியை பாகிஸ்தான் வீரர் ஒருவர் வம்பு இழுக்க சென்ற போது அப்போதைய கேப்டன் மிஸ்பா உல் ஹக் அந்த வீரரை கண்டித்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த சொன்னதாகவும், ஆனால் தற்போதைய அணியில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல் மற்ற விஷயங்கள் கவனம் செலுத்தி மோதலில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அப்படி இந்திய வீரர்களை வம்பிழுக்க வேண்டும் என்றால் களத்தில் தங்களது திறமையை காட்டி விட்டு வம்பி இழுங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, October 2, 2025, 18:06 [IST]
Other articles published on Oct 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+