Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK:இந்தியாவிடம் அடைந்த தோல்வி..பாகிஸ்தான் பைனலுக்கு செல்லுமா? சல்மான் படைக்கு வாய்ப்பிருக்கா

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் தற்போது சூப்பர் ஃபோர் சுற்றிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து நடுவில் இந்திய அணி 18 புள்ளி ஐந்து ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டிருக்கிறது.

Ind vs Pak

இந்த நிலையில் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் தங்களுக்குள் ஒவ்வொரு முறை மோதிக்கொள்ள வேண்டும். மொத்தம் நடைபெற உள்ள மூன்று ஆட்டங்களில் மூன்றுமே வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே சூப்பர் 4 போட்டிக்கு தகுதி பெற முடியும்.

இந்த நிலையில் நேற்று பலமான அணியாக கருதப்பட்ட இலங்கை வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது பாகிஸ்தானும் மண்ணை கவ்வி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி தற்போது இறுதிப் போட்டிக்கு செல்ல முடியுமா என்பதை தற்போது பார்க்கலாம். இந்தியாவிடம் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி, புதன்கிழமை இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் நாக் அவுட் போன்ற போட்டியாக இது அமையும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இருக்கும். தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேறும். இதேபோன்று பாகிஸ்தான அணி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றால் ரன் ரேட் அடிப்படையில் மீண்டும் இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோத முடியும்.

Story first published: Monday, September 22, 2025, 7:00 [IST]
Other articles published on Sep 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+