Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை.. மோஷின் நக்வி பிடிவாதம்

லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட வில்லை.

இதற்கு காரணம் பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான மோசின் நக்வி இடம் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்தியா போர்க்கொடி தூக்கியது. இதனால் வேறு ஒரு நபரிடமிருந்து கோப்பையை வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக இந்திய தரப்பு தெரிவித்தனர்.

Ind vs Pak

ஆனால் இதற்கு மோசின் நக்வி ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக இந்திய அணி தொடரை வென்றும் கோப்பை இல்லாமல் ஊர் திரும்பினர். இந்த நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ தரப்பினர் மோஷின் நக்வி செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோப்பையை இந்தியாவிடம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மோஷின் நக்வி இந்த கூட்டம் ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தான் என்றும் கோப்பையை பெறுவது குறித்து இன்னொரு நாள் பேசலாம் என்று கூறி கூட்டத்தை முடித்து விட்டார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவராக கோப்பையை நாம் வெற்றி பெற்ற அணி இடம் வழங்க அதே நாளில் வழங்க தயாராக இருந்தேன்.

இப்போதும் கூட நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் அவர்கள் தான் என்னிடம் கோப்பை வாங்க முன் வரவில்லை. கோப்பையை வாங்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வாருங்கள். வந்து என்னிடம் கோப்பையை பெற்று விட்டு செல்லுங்கள்.

நான் இன்னும் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகின்றேன். நான் எந்த தவறையும் செய்யவில்லை. இதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. பிசிசிஐயாக இருந்தாலும் சரி வேறு யாரிடமும் சரி மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று மோசின் நக்வி கூறியுள்ளார். இந்த விவகாரத்தை ஐசிசியிடம் கொண்டு போக உள்ளதாக பிசிசிஐ தரப்பு அந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

Story first published: Wednesday, October 1, 2025, 23:48 [IST]
Other articles published on Oct 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+