For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: 3 பைனலில் இந்திய அணியை வீழ்த்திய “வில்லன்” சர்பராஸ் அகமது.. 19 வருடத்தில் 3 முறை

துபாய்: கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது என்றாலே சர்ச்சைகளும் சலசலப்புகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவுக்கு எதிராக ஒரு இறுதிப்போட்டி என்று வந்துவிட்டால், சர்பராஸ் அகமது இந்திய அணியின் 'வில்லனாக' மாறிவிடுவது வரலாறாக மாறி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) அன்று துபாயில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியிலும் இதுதான் நடந்திருக்கிறது!

இதற்கு முன் கேப்டனாக இரண்டு முறை (2006, 2017) இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்திய சர்பராஸ், இம்முறை இளம் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக வந்து இந்திய அணியின் கோப்பைக் கனவைச் சிதறடித்திருக்கிறார்.

IND vs PAK Pakistan s Sarfaraz Ahmed became India s Nemesis helps beat India in U19 Asia Cup Final

19 வயதுக்குட்பட்டோருக்கான 2025 ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் விளாசி இந்திய பவுலர்களைப் பந்தாடினார்.

இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, வெறும் 156 ரன்களுக்குச் சுருண்டது. 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தோல்வி இந்திய ரசிகர்களுக்கு 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை அப்படியே ரீ-வைண்ட் செய்து காட்டியது.

2017 மேஜிக்... 2025 ரிப்பீட்!

இந்த இரண்டு இறுதிப்போட்டிகளுக்கும் இடையே ஆச்சரியப்படும் வகையில் பல ஒற்றுமைகள் உள்ளன.

2017 சாம்பியன்ஸ் டிராபி: லண்டனில் நடந்த இறுதிப்போட்டியில் சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் 338 ரன்கள் குவித்தது. இந்தியா 158 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

2025 U19 ஆசியக் கோப்பை: துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்தது. இந்தியா 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தலைமுறைகள் மாறினாலும், கதை என்னவோ ஒன்றாகத்தான் இருக்கிறது. இமாலய ஸ்கோர், அதனைத் துரத்த முடியாமல் இந்தியா சரணடைவது என வரலாறு திரும்பியிருக்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான ஒற்றுமையும் உண்டு. இந்த இரண்டு தொடர்களிலுமே லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.

2017-ல் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதேபோல், 2025 ஆசியக் கோப்பை லீக் சுற்றிலும் இந்திய ஜூனியர் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. "லீக் சுற்றில் அடி வாங்கினாலும், ஃபைனலில் திருப்பிக் கொடுப்போம்" என்ற பாகிஸ்தானின் பழிவாங்கும் படலத்திற்குப் பின்னணியில் இருந்தவர் அதே சர்பராஸ் அகமதுதான்.

சர்பராஸ் அகமது: இந்தியாவின் ராசியில்லா ராஜா?

சர்பராஸ் அகமது அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணி, இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் வெற்றி நிச்சயம் என்றாகிவிட்டது. சர்பராஸ் அகமது செய்த அந்த 3-0 சாதனை:

2006 U19 உலகக்கோப்பை: கொழும்புவில் நடந்த அந்தப் போட்டியில் சர்பராஸ் தலைமையிலான பாகிஸ்தான் இந்தியாவை 71 ரன்களில் சுருட்டி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2017 சாம்பியன்ஸ் டிராபி: சீனியர் அணியின் கேப்டனாக இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

2025 U19 ஆசியக் கோப்பை: தற்போது ஆலோசகராக இருந்து, 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய அணியை வழிநடத்தியுள்ளார்.

Story first published: Monday, December 22, 2025, 8:10 [IST]
Other articles published on Dec 22, 2025
English summary
IND vs PAK: Pakistan’s Sarfaraz Ahmed became India’s Nemesis; helps beat India in U19 Asia Cup Final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+