Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: வாய் பேச்சில் போட்டி என்றால் பாகிஸ்தான் தான் வெல்லும்.. ஹர்பஜன் சிங் கிண்டல்

வாய்ப்பேச்சில் போட்டி என்றால் அதில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹரபஜன் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுவரை நடைபெற்ற 16 சர்வதேச t20 போட்டிகளில் இந்திய அணி 13 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெறும் மூன்று போட்டிகளில் தான் வென்றிருக்கிறது. மேலும் சூப்பர் 4 சுற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியாவிடம் வம்பு இழுத்து சீன் போட்டு இருக்கிறார்கள்.

Ind vs Pak

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "வாய் பேச்சில் போட்டி என்றால் நிச்சயமாக பாகிஸ்தான் தான் வென்று இருக்கும். ஆனால் இது பேட்டிற்கும், பாலுக்கும் இடையிலான போட்டி. அதனால் தான் பாகிஸ்தானால் ஜெயிக்க முடியவில்லை."

"இதில் இந்திய அணி மிகவும் பிரமாதமாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் சீனியர் பவுலர்களான ஹாரிஸ் ரவுப் மற்றும் ஷாகின் அபிரிடி அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். முதல் ஆறு ஓவரில் ஒரு விக்கெட்டை கூட பாகிஸ்தான் பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. அதுவும் அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள்."

"அனுபவ வீரர்களே இப்படி கத்தி பேசி பந்தாலும் பேட்டாலும் செயல்பட முடியவில்லை என்றால், அவர்கள் எதை நோக்கி செல்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பேசட்டும். நாம் பந்தாலும் பேட்டாலும் பதில் சொல்வோம்."

"ஆனால் எப்போது சிறந்த முறையில் பதில் அளிக்க வேண்டுமோ அப்போது நாம் செய்வோம் என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.சர்வதேச t20 கிரிக்கெட் மாறி வரும் நிலையில் அதற்கு ஏற்ப உடல் தகுதி திறன் ஆகியவற்றில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருக்கிறது. இதன் காரணமாக தான் இந்தியாவை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் தடுமாறுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்."

Take a Poll
Story first published: Tuesday, September 23, 2025, 16:43 [IST]
Other articles published on Sep 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+