Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: அடப்பாவிங்களா? இதை கூட செய்ய மாட்டீங்களா? பாகிஸ்தான் நிர்வாகி அதிரடி நீக்கம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டம் சர்ச்சை ஒன்றில் சிக்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், போட்டி முடிவடைந்த உடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்காமல் சென்றனர்.

மேலும் போட்டி முடிவடைந்த உடன் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்தும் சூரியகுமார் யாதவ் பேசியது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் தங்களிடம் கைகுலுக்கவில்லை என பாகிஸ்தான் அணி சார்பாக icc யிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Ind vs Pak

ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் மிகப்பெரிய டிவிஸ்ட் ஒன்றும் நடந்திருக்கிறது. அதாவது இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை மேலோங்கி இருப்பதால், இந்த தொடருக்கு முன்பாகவே இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் பேசிக் கொள்ள வேண்டாம்.

கைகுலுக்கி கொள்ள வேண்டாம் என ஐசிசி சார்பாக முடிவெடுக்கப்பட்டதாகவும் அது அந்த பணி நிர்வாகத்திடம் முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகியான உஸ்மான் வால்ஹா இந்த தகவலை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் தெரிவிக்கவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

உஸ்மான் மட்டும் இதை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்கும் விவகாரத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் களத்தில் தற்போது அவமானப்பட நேர்ந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகியின் இந்த கவனக்குறைவு தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி, வால்காவை அணியை விட்டு நீக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் வால்கா, சரியாக செயல்படவில்லை என்றும் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி விட்டதாகவும் கண்டித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, September 17, 2025, 9:59 [IST]
Other articles published on Sep 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+