Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டே முடிவால் டிராவிட் மெகா ஸ்கெட்ச்.. பாகிஸ்தானுக்கு எமனாக இருக்கும் 2 பேர்.. இந்த ரிஸ்க் ஏன்

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2 மெகா ஸ்கெட்ச்களை போட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்பேர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

2 முக்கிய தேர்வுகள்

2 முக்கிய தேர்வுகள்

பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்காக பயிற்சியாளர் ப்ளேயிங் 11ல் இரண்டே இரண்டு அட்டகாசமான திட்டத்தை ஒளித்துவைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் அதிக முறை சொதப்பியுள்ளது. எனவே முன்கூட்டியே விக்கெட்கள் சரிந்தால் இடதுகை வீரர் ரிஷப் பண்ட் உதவியாக இருப்பார் என வல்லுநர்கள் கருத்துக் கூறினர். ஆனால் அதனை டிராவிட் துளிக்கூட கண்டுக்கொள்ளவில்லை. மாறாக தினேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இளம் வீரர் ரிஷப் பண்ட், பெரிய போட்டிகளில் பதற்றத்தால் சொதப்புகிறார். ஆனால் பாகிஸ்தானிலும் சரி, ஆஸ்திரேலியாவிலும் சரி, தினேஷ் கார்த்திக் அதிக அனுபவம் கொண்டவர். எனவே கடைசி 5 பந்துகளில் கூட அசால்ட்டாக அதிரடி காட்டுவார். ஒருவேளை டாப் ஆர்டர் வேகமாக சரிந்தாலும் இடதுகை வீரர் அக்‌ஷர் பட்டேலை முன்கூட்டி களமிறக்கலாம் என திட்டமிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானுக்கு அதிரடியிலும் சரி, இடதுகை வீரராகவும் சரி தலைவலி இருக்கும்.

அஸ்வின் எதற்காக சேர்ப்பு

அஸ்வின் எதற்காக சேர்ப்பு

இதே போல இந்தியாவின் முதன்மை ஸ்பின்னரான யுவேந்திர சாஹலும் நீக்கப்பட்டுள்ளார். அஸ்வின் பெரியளவில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை தான். அந்த அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இவர்களை சமாளிக்க அஸ்வின் தான் ஒரே வழியாகும்.

ரன்ரேட்

ரன்ரேட்

ஏனென்றால் உலகிலேயே இடதுகை பேட்ஸ்மேன்களை திணறப்படிதில் அஸ்வின் ஸ்பெஷலிஸ்ட் ஆகும். சுலபமாக விக்கெட்டை எடுத்துவிடுவார். இதுமட்டுமின்றி அஸ்வினின் புது முயற்சிகளால், ரன்ரேட் மிகவும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் 4 ஓவர்களில் பாகிஸ்தானின் ரன்ரேட் குறைக்கப்படும். இதன் மூலம் டிராவிட் 2 வீரர்களை வைத்து பெரிய திட்டத்தை போட்டுள்ளார்.

Story first published: Sunday, October 23, 2022, 14:16 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+