Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் வீரர்களுடன் வாக்குவாதம்.. பாய்வதற்கு தயாரான சுப்மன் கில்.. ஆட்டத்தை களைத்த ரிங்கு சிங்!

துபாய்: பாகிஸ்தான் அணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட சுப்மன் கில்லை, இந்திய அணியின் ரிங்கு சிங் சமாதானம் செய்து இழுத்து சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஹாரிஸ் ராஃப் மற்றும் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, சுப்மன் கில் மற்ற பாகிஸ்தான் வீரர்களுடன் மோதினார். அதனை தவிர்க்கும் வகையில் ரிங்கு சிங் இழுத்து சென்றது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி 19 ஓவர்களுக்குள் எட்டி அசத்தியது. குறிப்பாக அபிஷேக் சர்மா ஆடிய ஆட்டம் பாகிஸ்தான் ரசிகர்களை தூக்கத்தை இழக்க செய்திருக்கிறது.

Rinku Singh stopped the fight

ஏனென்றால் ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்சர் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். 24 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், 39 பந்துகளில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 74 ரன்களை விளாசி தள்ளினார். அபிஷேக் சர்மாவுடன் சுப்மன் கில் ஆடிய ஆட்டமும் பாகிஸ்தான் பவுலர்களை புலம்ப வைத்துள்ளது. ஏனென்றால் அபிஷேக் சர்மா பட்டாசாய் வெடித்தார்.

மறுபக்கம் சுப்மன் கில் கிளாசிக் ஷாட்ஸ் மூலமாக ஆச்சரியம் கொடுத்தார். ஒரு கட்டத்தில் சுப்மன் கில்லின் அபார பவுண்டரியால் டென்ஷனான ஹாரிஸ் ராஃப், நேரடியாக அவருடன் மோதலில் ஈடுபட முயன்றார். அப்போது மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா தனது நண்பனுக்காக முன் நின்று ஹாரிஸ் ராஃப்-ஐ வந்த வழியாக நடந்து செல் என்று வார்னிங் கொடுத்தார்.

இதன்பின் பாகிஸ்தான் வீரர்கள் அந்த இடத்தில் குவிய உடனடியாக நடுவர்கள் மோதலை தடுக்க முயற்சித்தனர். இதன்பின் பாகிஸ்தான் வீரர்கள் களைந்தாலும், சூழல் கொஞ்சம் பதற்றத்தை கொடுத்தது. அப்போது இந்திய அணியின் ஹர்சித் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் பேட்ஸ்மேன்களுக்கு டிரிங்ஸ் கொடுக்க உள்ளே ஓடி சென்றனர்.

அப்போது ரிங்கு சிங் அங்கு மோதலுக்காக காத்திருந்த சுப்மன் கில்லை அந்தப் பக்கமாக இழுத்து சென்றார். சீனியர் வீரரான ரிங்கு சிங் சரியான நேரத்தில் சுப்மன் கில்லை இழுத்து சென்றது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் ரிங்கு சிங்கிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ரிங்கு சிங் பெஞ்ச் செய்யப்பட்டிருந்தாலும், விரைவில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று ஆறுதலும் கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, September 23, 2025, 18:20 [IST]
Other articles published on Sep 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+