Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங் சேஞ்ச், ஃபீல்டிங் சேஞ்ச், டிஆர்எஸ்.. பாகிஸ்தானை பொளந்த இந்தியா.. காரணமே ரோகித் சர்மா தான்!

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதில் இந்திய அணியின் பவுலிங்கின் போது ரோகித் சர்மா எடுத்த அசத்தலான முடிவுகள் பற்றி பார்க்கலாம்.

அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதில் கடைசி 36 பந்துகளில் 8 விக்கெட்டை பாகிஸ்தான் அணி இழந்திருக்கிறது.

IND vs PAK: Rohit sharmas on-field Captaincy against Pakistan is applauded by Cricket fraternity and fans

இந்திய அணியின் பவுலர்களான பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 5 வீரர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு நேரடியாக இந்த 5 வீரர்களும் சரிவை ஏற்படுத்தி இருந்தாலும், அதற்கு முதன்மை காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இருந்துள்ளார்.

தொடக்கத்தில் சில ஓவர்களில் அதிகமாக பவுண்டரியை விட்டுக் கொடுத்தாலும் எந்த லெந்தில் வீச வேண்டும் என்று சிராஜிற்கு ஆலோசனை வழங்கி அப்துல்லா சஃபீகை வீழ்த்தி காரணமாக இருந்தார் ரோகித் சர்மா. அதன்பின் ஹர்திக் மற்றும் ஷர்துல் தாக்கூரை அட்டாக்கில் கொண்டு வந்த ரோகித், பின்னர் குல்தீப்பை ஒரு புறம் வைத்து ஹர்திக் பாண்டியாவை வைத்து அட்டாக் செய்தார். இதனால் இமாம் உல் ஹக் வீழ்ந்தார்.

பின்னர் நீண்ட நேரம் விக்கெட்டிற்காக காத்திருந்த ரோகித் சர்மா, மீண்டும் ஹர்துல் தாக்கூரிடம் செல்லாமல் சிராஜ் கைகளில் பந்தை கொடுக்க பாபர் அசாம் விக்கெட் வீழ்ந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பும்ராவை அட்டாக்கில் கொண்டு வராமல் பாகிஸ்தான் அணியின் வீகன்ஸை உணர்ந்து குல்தீப் யாதவை கொண்டு அட்டாக் செய்தார்.

அப்போதும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பின், உடனடியாக டெய்லண்டர்களை வீழ்த்த பும்ரா மற்றும் ஜடேஜாவை கொண்டு வந்தார். ரோகித் சர்மா செய்த ஒவ்வொரு பவுலிங் மாற்றங்களும் பாகிஸ்தான் அணிக்கு சரிவை கொடுத்தது. இதனிடையே கேஎல் ராகுல் தயக்கத்துடன் இருந்தும் குல்தீப் யாதவ் பந்தில் தைரியமாக எடுத்த டிஆர்எஸ் ரிவ்யூ ஆட்டத்தையே இந்திய பக்கம் திருப்பியது. இப்படி கேப்டனாக ரோகித் சர்மா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, October 14, 2023, 18:29 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+