Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: ஓமன் போட்டியை பார்த்தீங்களா? சஞ்சு சாம்சனுக்கு கொடுமை பண்ணாதீங்க.. ரசிகர்கள் கோரிக்கை

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சூப்பர் ஃபோர் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மூன்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட மற்ற இரண்டு போட்டிகளில் பெரிய வெற்றி பெற்று மற்ற அணிகளின் தயவை நாடும் வாய்ப்பு ஏற்படும். இந்த நிலையில் லீக் சுற்று இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி படுதோல்வியை தழுவியதால், அந்த நாட்டில் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.

Sanju samson

இதனால் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கொஞ்சநஞ்சம் மானத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் இந்தியாவுக்கு கடும் சவால்களை அளிக்க வேண்டும். இந்த நிலையில் இந்தியா நடப்பு உலக சாம்பியன் ஆக இந்த தொடரில் களமிறங்கியது. இந்தியாவை வீழ்த்தவே முடியாது என்ற பேச்சை ஓமன் அணி அசைத்துக் காட்டிவிட்டது.

இந்திய அணிக்கும் நெருக்கடியை கொடுக்க முடியும் என்ற விஷயத்தை ஓமன் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இதனால் பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்திய அணி தங்களுடைய முழு ஆதிக்கத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருகிறார். டி20 போட்டியில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனால் அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சஞ்சு சாம்சன் நம்பர் ஒன் வீரராக களமிறங்கவில்லை என்றால் கூட மூன்றாவது வீரராக களம் இறக்குங்கள் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே போன்ற வீரர்கள் தடுமாறினர்.

அந்த நிலையில் சாம்சன் மட்டும் தான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.ஒருவேளை சஞ்சு சாம்சனும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து இருந்தால் ஓமன் அணி வெற்றி பெற்றிருக்கும். இதனால் சஞ்சு சாம்சனின் திறமையை மதித்து அவருக்கு முதல் மூன்று இடங்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.

Story first published: Sunday, September 21, 2025, 11:02 [IST]
Other articles published on Sep 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+