IND vs PAK: ஷாகின் அஃபிரிடி கேரியரையே முடிச்சிவிட்ட இந்திய அணி.. இப்படி ஒரு விசயம் நடந்ததே இல்ல
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பெரிதும் நம்பி இருந்தது ஷாகின் அப்ரிடியை தான். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர் எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். 25 வயது ஆன ஷாகின் அப்ரிடி, இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 116 விக்கெட்களும், 66 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்களும், 89 டி20 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக ஷாகின் அப்ரிடி ஐந்து போட்டிகள் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் ஐசிசி தொடரில் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோற்றது கிடையாது. ஆனால் 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் இடம் இந்தியா தோல்வியை தழுவியதற்கு ஷாகின் அபிரிடி பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது.

அவருடைய இடத்துக்கு வேகப்பந்து வீச்சு யாக்கர்களை எதிர்கொள்ள முடியாமல் ராகுல், ரோகித் சர்மா, ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.. ஆனால் தற்போது இருக்கும் இளம் படை சாகின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு பயமே இன்றி விளையாடுகிறார்கள். சூப்பர் 4 ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.
நேற்று ஷாகின் அபிரிடி மூன்று புள்ளி ஐந்து ஓவர்களை வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ஷாகின் அபிரிடி பார்த்து தங்களுக்கு இனி பயம் இல்லை என்ற இந்திய அணி நிரூபித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எதிராக லீக் சுற்றிலும் இந்திய அணி அபாரமாக விளையாடியது.
வெறும் இரண்டு ஓவர் மட்டுமே வீசிய அவர் 23 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் இரண்டு மூன்றுகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இப்படி தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக ரன்களை வாரி வழங்குவது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஷாகின் கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய வீரர்கள் முடித்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications