Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: உலகிலேயே யாரும் செய்யாத சாதனை..சிஎஸ்கே வீரர் தான் அதிர்ஷ்ட தங்கம்..எப்படி சாத்தியமாச்சு?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா நான்கு ஓவருக்கு 45 ரன்கள் விட்டுக் கொடுத்து தடுமாறிய நிலையில், சிஎஸ்கே அணி வீரர் சிவம் துபே நான்கு ஓவருக்கு 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதன் மூலம் தாம் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை சிவம் துபே மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் யாருமே செய்யாத ஒரு சாதனையை சிவம் துபே படைத்திருக்கிறார். அதாவது சிவம் துபே விளையாடிய 32 டி20 போட்டிகளில் இந்தியா இதுவரை ஒரு முறை கூட தோற்றதில்லை என்ற மகத்தான சாதனையை படைத்து இருக்கிறது.

Shivam dube

சிவம் துபே இடம் பெற்ற 32 டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டும் மழை காரணமாக முடிவில்லாமல் இருந்திருக்கிறது. மற்ற 29 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இது உலக கிரிக்கெட்டில் யாருக்குமே நடக்காத ஒரு விஷயமாகும். அதுவும் டி20 கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது கணிக்க முடியாத விஷயமாக உள்ள நிலையில் சிவம் துபே 100% வெற்றி சதவீதத்தை இந்திய அணிக்காக வைத்திருக்கிறார்.

இது எப்படி சாத்தியம் என்பதை தற்போது பார்க்கலாம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சிவந்துபே பேட்ஸ்மேனாக இருப்பதை விட பவுலராக தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பாராட்டியுள்ளார். கடந்த சில ஆட்டங்களாக சிவம் துமே பந்து வீசும் போது எதிர் அணி பேட்ஸ்மேன்கள் அவருடைய பௌலிங் அடித்து ஆடி ரன்களை சேர்க்கலாம்.

இது ரன் அடிக்கும் வாய்ப்பு என நினைத்து விக்கெட்டுகளை இழந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் சிவம் துபே அதிக அளவு பந்துவீச்சில் தாக்கத்திற்கு ஏற்படுத்துவதாகவும் இது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தமக்கு கிடைக்கும் வாய்ப்பையும் அவர் நன்றாக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீகாந்த், இதுதான் சிவம் துபேவின் வெற்றியின் மந்திரமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்திய அணி அடுத்தது சூப்பர் போர் சுற்றில் வங்கதேசத்தை வரும் புதன்கிழமை எதிர்கொள்கிறது.

Story first published: Monday, September 22, 2025, 17:46 [IST]
Other articles published on Sep 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+