Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவன் இன்னும் திருந்தல.. ஸ்பின்னரிடம் திணறிய ஆறுச்சாமி.. இந்திய அணியை மாட்டிவிட்ட சிவம் துபே!

நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சிவம் துபே 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் ரச்சின் ரவீந்திராவையும் ரன் அவுட்டாக்கிவிட்டு சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இருந்தாலும் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலரும் சிவம் துவேவுக்கு மோசமான நாள் என்று பெரியளவில் விமர்சிக்கவில்லை.

t20 world cup indian national cricket team cricket Shivam Dube T20 World Cup 2024

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி ரசிகர்களுக்கு சிவம் துபே டபுள் ட்ரீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசிகர்களுக்கு கண்ணீர்விட்டு கதறும் வகையில் மிகவும் மோசமான ஒரு இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார் சிவம் துபே.

இந்திய அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, ரிஷப் பண்ட் - அக்சர் படேல் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி மீட்டெடுத்தனர். அதிரடியாக விளையாட முயன்ற அக்சர் படேல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த "ஸ்கேம்மர்" சூர்யகுமார் யாதவ் 8 பந்துகளில் 7 ரன்களில் எடுத்து வெளியேறினார்.

இதனால் இந்திய அணி கொஞ்சம் தடுமாறிய நிலையில் இருந்தது. அப்போது அதிரடியாக விளையாடி ரன்களை எடுக்க சிவம் துபேவை இந்திய அணி களமிறக்கியது. ஹாரிஸ் ராஃப் பவுலிங்கில் நிதானம் காத்த சிவம் துபே, ஸ்பின்னரை பொளந்து கட்ட காத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கணித்தனர். அவர் எதிர்பார்த்ததை போல் இமாத் வாசிம் அட்டாக்கில் வந்தார்.

அந்த ஓவரில் சிக்சரை பறக்கவிடுவார் என்று எதிர்பார்த்த போது, அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டும் சேர்க்கப்பட்டது. இதன்பின் நட்சத்திர பவுலரான நசீம் ஷா அட்டாக்கில் வந்தார். கூடுதல் வேகத்துடன் நசீம் ஷா வீசிய பந்தை சாதாரணமாக சிவம் துபே எதிர்கொள்ள, அது நேராக அவரின் கைகளிலேயே கேட்ச்சானது. இதனால் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே ரசிகர்களே சிவம் துபேவை பொளந்து கட்டி வருகின்றனர்.

Story first published: Sunday, June 9, 2024, 23:14 [IST]
Other articles published on Jun 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+