Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நான் தான் ஃபிராடுனு நினைக்கிறேன்" பாகிஸ்தான் தோல்வி குறித்து சோயிப் அக்தர் சாடல்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியிடம் தொடர்ந்து பாகிஸ்தான் தோல்வியை தழுவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் அந்த அணியின் பயிற்சியாளரை கடுமையாக சாடியிருக்கின்றார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி உசைன் டாலத் என்ற வீரரை நம்பர் நான்காவது பேட்டிங் வரிசையில் களம் இறக்கியது.

ஆனால் அவர் 11 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் ரன்குவிக்கும் வேகம் குறைந்தது ஒரு கட்டத்தில் 10 ஓவரில் 91 ரன்கள் என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Shoaib Akthar

இதனால் பாகிஸ்தான அணி 200 ரன்களை தாண்டாமல் போனதற்கு ஹூசைன் டாலத் தான் காரணம் என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், பயிற்சியாளரை நோக்கி தான் நாம் கேள்விகளை கேட்க வேண்டும். அவருக்கு அறிவு இருக்கா? இல்லையா? கொஞ்சம் கூட அறிவில்லாத முடிவை தான் அவர் எடுத்திருக்கிறார்.

சம்பந்தமே இல்லாத ஒரு வீரரை அணியில் சேர்க்கலாமா ? இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருவேளை நான்தான் மோசடிக்காரனா? எனக்கு ஒன்றும் புரியவில்லையா என்று தோன்றுகிறது. 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டின் விளையாடி பயிற்சியாளர் செய்யும் நகர்த்தலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நானே என்னை கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த ஐந்து ஆறு போட்டிகளாக நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். சரியான வீரர்களை தேர்வு செய்து விளையாடுங்கள் என்கின்றேன். இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் உசைன் டாலத்தை எவ்வாறு சேர்க்கலாம். அதைப்பற்றி நீங்கள் முதலில் எப்படி யோசித்தீர்கள் ? அவரை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று நினைத்தீர்கள்?

முதலில் அதற்கான காரணத்தை சொல்லுங்கள். முதலில் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் அந்தப் பதவிக்கு வந்தால் நான் சரியான விஷயத்தை மட்டுமே செய்வேன். எது முக்கியமோ அதை மட்டும் தான் செய்வேன். எனக்கு அந்த பொறுப்பை தாருங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு கூட்டு முயற்சியில் நம்பிக்கை இருக்கின்றது.

லாஜிக் மீது நம்பிக்கை உடையவன் தான் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். எனக்கு பவர் தாருங்கள். நான் அனைத்தையும் சரி செய்கிறேன் என்று நான் கூறவே இல்லை. நான் ஒரு 20 பேராவது ஆலோசனை குழுவில் வைத்துக் கொண்டு அவருடைய முடிவை நான் எடுத்துக் கொள்வேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டை சரி செய்ய வேண்டுமென்றால், மூன்று ஆண்டுகள் எனக்கு நேரம் கொடுங்கள்.நான் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பேன் சையும் அயூப் இடம் போய் விளையாடு எதைப்பற்றியும் கவலைப்படாது. நீ ஆட்டம் இழந்தால் கூட நான் உன்னை அணியை விட்டு நீக்க மாட்டேன் என்று நம்பிக்கை கொடுப்பேன் என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, September 23, 2025, 18:40 [IST]
Other articles published on Sep 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+