Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபிஷேக் பச்சனை வீழ்த்தினால் பாகிஸ்தான் வெல்லுமா? வாய் தவறி பேசிய சோயிப் அக்தர்.. ரசிகர்கள் கிண்டல்

துபாய்: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அபிஷேக் பச்சன் விக்கெட்டை பாகிஸ்தான் வீழ்த்தினால் இந்தியா தோல்வியை தழுவும் என்று பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் பேசியிருப்பது சமூக வலைத்தளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த தொடரில் பாகிஸ்தான அணி இரண்டு முறை இந்தியாவை எதிர்கொண்டு தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் மூன்றாம் முறையாக பைனலில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஒரு அளவுக்கு மெருகேறி இருக்கிறது. இதனால் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்தைத் தெரிவித்திருந்தனர்.

shoib akthar

அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் பேசும்போது ஒரு பெரும் நகைச்சுவை சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி வருகிறார். நடப்பு தொடரில் மற்றும் அவர் ஹாட்ரிக் அரை சதம் அடித்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா கிட்டத்தட்ட 200 அளவில் ஸ்ட்ரைக் ரேட் அடிப்பதால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக மாறிவிடுகிறது.

இதன் மூலம் இந்தியா எளிதில் வெற்றி பெற்றுவிடுகிறது. குறிப்பாக ஷாகின் அப்ரிடி பந்துவீச்சு முதல் பந்திலே பவுண்டரி, சிக்சர் என அவர் அடித்து விடுகிறார். இதன் மூலம் அவருடைய உத்வேகம் குலைந்து விடுகிறது. இதனை குறிப்பிட்டு பேசிய சோயிப் அக்தர், அபிஷேக் ஷர்மா என சொல்வதற்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் அபிஷேக் பச்சன் என்ற பெயரை பயன்படுத்தினார். இதனை கேட்டு மற்ற கிரிக்கெட் வல்லுனர்கள் சிரித்தனர். அது அபிஷேக் பச்சன் கிடையாது அபிஷேக் ஷர்மா என்று கூறி சோயிப் அக்தரை திருத்தினர். இதற்கு பதில் அளித்துள்ள அபிஷேக் பச்சன், உங்கள் மீதுள்ள மரியாதைக்காக இது சொல்கின்றேன். நான் பெரிய கிரிக்கெட் வீரர் கிடையாது. எனக்கு கிரிக்கெட் சுத்தமாக வராது. ஆனால் என்னுடைய விக்கெட்டையும் அவர்கள் வீழ்த்துவார்களா என்பது சந்தேகமே என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 26, 2025, 23:52 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+