Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: நான் இருக்கேன் மச்சான்! ஸ்பின்னருக்கு எதிராக 2 ரன் அடித்த கில்..உதவி செய்த அபிஷேக் சர்மா

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், தொடக்க வீரராக தடுமாறி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் மொத்தமாகவே 35 ரன்கள் தான் கில் அடித்து இருக்கின்றார். இதில் பாகிஸ்தான் எதிராக 10 ரன்களும், ஓமன் அணிக்கு எதிராக ஐந்து ரன்கள் மட்டுமே கில் அடித்திருந்தார்.

இந்த நிலையில் கில்லுக்கு ஒரு மிகப்பெரிய மைனஸ் இருக்கின்றது. இந்த தொடரில் 24 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் மொத்தமாக 7 பந்துகளை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எதிர் கொண்டு வெறும் இரண்டு ரன்களை மட்டுமே சேர்த்து இருக்கிறார். இதன் மூலம் கில்லை சமாளிக்க பாகிஸ்தான் அணி அப்ரார் அகமத் என்ற சுழற் பந்துவீச்சாரை பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறது.

Shubman gill Abhishek Sharma

இந்த நிலையில் தமக்கு இருக்கும் இந்த வீக்னீசை சரி செய்வதற்காக கில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருடைய நண்பரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவருமான அபிஷேக் ஷர்மா கில்லுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உதவி செய்தார். அவருக்கு தொடர்ந்து இடது கை சுழற் பந்துவீச்சை அபிஷேக் ஷர்மா வீசினார்.

அப்போது கில்லிடம் எப்படி பந்து வீச வேண்டும். உனக்கு எந்த பந்து வீசினால் அடிக்க கடினமாக இருக்கிறது என்று சொல் நான் அதை செய்கின்றேன். பேட்டிங்கில் நீ இந்த இடத்தில் தவறு செய்கிறாய் போன்ற விஷயங்கள் எல்லாம் அபிசேக் பேசினார். அதன்பின் வருண் சக்கரவர்த்தி கில்லுக்கு சில பந்துகளை வீசினார். அப்போது அருகில் நின்று கொண்டு கில், செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அபிஷேக் ஷர்மா அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

இருவரும் ஒரே கட்டத்தில் இந்திய அண்டர் 19 அணிக்கு வந்திருந்தார்கள். எனினும் தற்போது கில், மிகப்பெரிய வீரராக உருவெடுத்தாலும் தனது ஆரம்ப காலகட்ட நண்பனிடம் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பாடம் கேட்டு இருப்பதும் அதற்கு அவர் சொல்லித் தருவதும் காண்போரின் நெஞ்சை குளிர வைத்திருக்கிறது. நண்பனுக்காக அபிஷேக் ஷர்மா நேரத்தில் செலவு செய்து கில்லுடம் பயிற்சி செய்தது, இந்திய அணி எவ்வாறு ஒரு குடும்பம் போல் இருக்கிறது என்பதை காட்டி இருக்கிறது.

Story first published: Sunday, September 21, 2025, 13:40 [IST]
Other articles published on Sep 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+