Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கேப்டன் சூர்யகுமாரிடம் ஐசிசி விசாரணை.. கிரிக்கெட்டில் அரசியல் பேசியது ஏன் என விசாரணை

துபாய் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் நடந்து கொண்ட விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதை முறியடிப்பதற்காக இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் லீக் சுற்றில், பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு தாங்கள் எப்போதும் இந்திய ராணுவத்துடனும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுடன் துணை நிற்போம் என்று கூறியிருந்தனர்.

Suryakumar

இது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஆனால் இது பாகிஸ்தானை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் அரசியல் பற்றி பேசக்கூடாது என்றும், ஆனால் அந்த விதியை இந்திய அணி கேப்டன் சூரியகுமார் மீறிவிட்டார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் முறைப்படி புகார் அளித்திருக்கிறது.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி இருந்தது. இதை அடுத்து வியாழக்கிழமை சூரிய குமார் அழைத்த ஐசிசி நடுவர் ரிச்சர்ட்சன், கிரிக்கெட் களத்தில் தாங்கள் ஏன் அவ்வாறு பேசினீர்கள்? அதற்கான விளக்கம் என்ன என்று கேட்டிருக்கிறார். அதற்கு தன்னுடைய விளக்கத்தை சூரியக்குமார் பதிவு செய்திருக்கிறார்.

இந்த விசாரணையில் பிசிசிஐயின் தலைமை நிர்வாகி ஹேமான் அமின், இந்திய அணியின் மேலாளர் மல்லாபுர்க்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூரிய குமார் விளக்கத்தை கேட்டுள்ள ஐசிசி, இது தொடர்பாக வெள்ளிக்கிழமை தங்களுடைய முடிவை கூறும் என்று தெரிவித்திருக்கிறது சூரியகுமார் ஏதும் தவறாக சொல்லவில்லை என்றாலும் அவரை அழைத்து ஒரு கைதியை போல் விசாரணை நடத்தியது ஏன்?

ஜெய்ஷா தான் ஐசிசி தலைவராக உள்ள நிலையில் அவர் ஏன் இந்த விசாரணைக்கு ஒப்புக் கொண்டார் என்று பல கேள்விகளை இந்திய ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோன்று இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் விதமாக சைகை காட்டிய ஹரிஷ் ரவுப் மீதும் இந்தியா புகார் அளித்திருக்கிறது. அதற்கான விசாரணை விரைவில் நடத்தப்படும் என தெரிகிறது.

Story first published: Thursday, September 25, 2025, 22:36 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+