IND vs PAK: உஸ்மான் தாரீக்கிற்கு ஓவர் ஹைப் தந்த பாக். ரசிகர்கள்.. முதல் பந்திலே பவுண்டரி அடித்த சூர்யகுமார்
கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். இந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரீக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டும் இல்லாமல், பழைய கோலிவுட் திரைப்படத்தில் வில்லன்களுக்கு கூட இருப்பவர்கள் ஹைப் தருவது போல், உஸ்மான் தாரீக் யார் தெரியுமா என்ற பாணியில் பாகிஸ்தான் ரசிகர்கள் வாய் சவடால் விட்டனர்.
ஆனால், சூர்யகுமார் தாரீக் தமக்கு வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து, அசத்தினார்.இந்திய இன்னிங்ஸின் 11வது ஓவரில் தாரீக் வீசிய கேரம் பந்தை, யாதவ் இந்த ஷாட்டை அடித்தார். தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் சூர்யகுமார் 84 ரன்கள் எடுத்திருந்தார்.

35 வயதான சூர்யகுமார், 2026 ஆம் ஆண்டில் ஏழு இன்னிங்ஸ்களில் 182.70 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இதுவரை 338 ரன்கள் குவித்துள்ளார். பாகிஸ்தான் ஆட்டம் நீங்கலாக, இதில் நான்கு அரை சதங்களும் அடங்கும். அஇஷான் கிஷன் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான தொடக்கத்தை வழங்கியதை அடுத்து, சூர்யகுமார் யாதவும் திலக் வர்மாவும் இணைந்து விளையாடினார்.
கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார், 3 சிக்ஸர் 10 பவுண்டரிகள் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 192.50 ஆக இருந்தது. இருப்பினும், அபிஷேக் சர்மா நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், சூடாயகுமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிறிய சரிவிலிருந்து மீட்டார். 29 பந்துகளில் அவர் 32 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.
உஸ்மான் தாரீக்கிற்கு கொடுத்த ஹைப் அளவுக்கு அவர் பெரிய அளவு விக்கெட்டை எடுக்கவில்லை என்றாலும், அவர் ரன்களையும் பெரிய அளவு தரவில்லை. 4 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 23 ரன்கள் விட்டு கொடுத்தார். இதனால் இந்திய அணி 200 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் போனது.
.


Click it and Unblock the Notifications