Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: இந்திய பிளேயிங் 11இல் 2 மாற்றம்.. ஓபனிங்கில் அதிரடி மன்னன்.. பாகிஸ்தான் டாஸ் வெற்றி

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஆடுகளம் சற்று மெதுவாகவும், பந்துவீச்சுக்குச் சாதகமாகவும் இருக்கும் என்று கணித்துள்ள பாகிஸ்தான் அணி, தொடக்க ஓவர்களில் அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்திய அணியில் அதிரடியாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த டாஸ் நிகழ்வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

IND vs PAK T20 WC 2026 Pakistan Wins Toss Abhishek Sharma and Kuldeep Yadav in playing XI

டாஸ் வென்ற பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசியது: "நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். ஆடுகளம் சற்று பிசுபிசுப்பாக இருப்பது போலத் தெரிகிறது. அதனால் முதல் சில ஓவர்களில் பந்துவீச்சாளர்களுக்கு இது உதவும் என்று நினைக்கிறோம். அந்தச் சாதகமான சூழலை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். எங்கள் அணி வீரர்கள் பதற்றமின்றி இருக்கிறார்கள், இந்தச் சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளோம். கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறோம்" என்றார்.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியது: "நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியிருப்போம். முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்போம். இது மற்றுமொரு போட்டி என்று சொல்வது எளிது, ஆனால் இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பதை நாங்கள் அறிவோம். இந்த விளையாட்டு பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. யாருக்கு வேண்டுமானாலும் அன்று நல்ல நாளாக அமையலாம். அணியில் அபிஷேக் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்" என்றார்.

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உடல்நலம் தேறிய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் கடந்த போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளின் ஆடும் லெவன் விவரம்:

இந்தியா அணி (XI):

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான் அணி (XI):

சாஹிப்சதா ஃபர்ஹான் (விக்கெட் கீப்பர்), சயிம் அயூப், சல்மான் அலி ஆகா (கேப்டன்), பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.

Story first published: Sunday, February 15, 2026, 18:41 [IST]
Other articles published on Feb 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+