Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி என்ன ஆச்சு உங்களுக்கு! இந்த விசயத்தை சரி செய்யுங்க.. முகமது கையிப் அறிவுரை

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது.

கடந்த ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் அபார ஆட்டதால் தான் பாகிஸ்தானிடம் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் அமெரிக்காவிடம் பாகிஸ்தான அணி வீழ்ந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

t20 world cup ind vs pak hardik pandya virat kohli indian national cricket team cricket 20 2024


இதனால்,பாகிஸ்தான் அணி மிகவும் அபாரமாக விளையாட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் ஆபத்தான வீரராக இருந்தாலும்,ஒரு விஷயத்தில் சரி செய்ய வேண்டும் என்று முகமது கையிப் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் பாகிஸ்தான் மட்டுமல்ல அனைத்து அணிகளுக்கும் விராட் கோலி ஆபத்தான வீரராக தான் இருப்பார்.

கோலியை ஆட்டமிழக்க வைப்பது என்பது நிச்சயம் எதிரணிகளுக்கு எளிதான விஷயமாக இருக்காது. எனினும் விராட் கோலி தன்னுடைய ஆக்ரோஷத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். கடந்த போட்டியில் அவர் ஐந்து பந்துகள் எதிர்கொண்டு 1 ரன் மட்டும்தான் எடுத்தார். காரணம் விரைவாக இறங்கி வந்து அடித்து பேட்டில் எட்ஜாகி ஆட்டம் இழந்தார்.

விராட் கோலி தற்போது சரியான பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடியிருக்கிறார். 700 ரன்கள் மேல் அடித்து இருக்கிறார். பவர் பிளேவில் அவர் எப்படி ஆதிக்கம் செலுத்தினார் என்பதை பார்த்தோம். அவரால் நிச்சயம் அனைத்து ஷார்ட்டுகளையும் விளையாட முடியும். ஆனால் தற்போது ஆடுகளம் கொஞ்சம் அபாயகரமாக இருப்பதால் விராட் கோலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் 130 வரை ஸ்ட்ரைக் ரைட்டை விராட் கோலி வைத்துக் கொள்ள வேண்டும். 140- 150 என்ற அளவுக்கு கூட ஸ்ட்ரைக் ரேட் செல்ல தேவையில்லை. இதே ஸ்டிரைக் ரேட் வைத்து நீங்கள் 15 ஓவர் வரை விளையாடினால் கூட, உங்களால் 60- 70 ரன்கள் அடித்து விட முடியும். விராட் கோலி பேட்டில் இருந்து ஒரு 70 ரன்கள் வந்தாலும், அது நிச்சயம் நல்ல இன்னிங்சாக தான் இருக்கும். இன்னிங்ஸ் இன் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை காத்து மோசமான பந்தை அடித்து ரன்கள் சேருங்கள் என கைஃப் அறிவுரை கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, June 8, 2024, 17:46 [IST]
Other articles published on Jun 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+