Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs Pak போட்டியில் வெல்லப்போவது யார்? கணிப்பை வெளியிட்ட போது மோதி கொண்ட பாக். ஜாம்பவான்கள்

மும்பை : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை லீக் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. பலம் வாய்ந்த அணியாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான அணி அமெரிக்காவுடன் தோல்வியை தழுவி இருப்பதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு சுத்தமாக குறைந்துவிட்டது.

மேலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை அந்த அணி ரசிகர்களை கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான்களான வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் கணித்தனர்.

t20 world cup ind vs pak hardik pandya virat kohli indian national cricket team cricket

அப்போது இருவரும் வெவ்வேறு பதிலை கூறியதால் இருவரும் செல்லமாக மோதிக்கொண்டனர். வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும் என்றும், வசீம் அக்ரம், இந்திய அணி தான் வெற்றி பெறும் என்றும் கூறிக் கொண்டனர். இது குறித்து பேசிய வக்கார் யூனிஸ், என்னுடைய இதயம் இன்று பாகிஸ்தான் தான் வெல்லும் என்று கூறுகின்றது.

இந்த தொடரில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் குறிப்பாக நியூயார்க் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கின்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றிபெற சரிசமமான வாய்ப்பு இருப்பதாக தான் கருதுகிறேன் என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த வசீம் அக்ரம் இந்தியா தான் வெற்றி பெற 60 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்திய அணி விளையாடிய விதத்தை பாருங்கள். நிச்சயமாக அவர்கள் தான் சிறந்த அணியாக விளங்குகிறார்கள். எப்போதுமே சிறந்த அணிகள் தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. நான் பாகிஸ்தானுக்கு 40 சதவீதமும் இந்தியா வெற்றி பெற 60% வாய்ப்பு இருப்பதாக தான் கூறுவேன். எனினும் பாகிஸ்தான் வீரர்கள் யாராவது ஒரு சிறந்த இன்னிங்ஸ் அல்லது ஒரு சிறந்த பவுலிகை வீசினால் ஆட்டம் தலைக்கீழாக மாற வாய்ப்பு இருக்கின்றது.

இதனால் இந்த போட்டி எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். டி20 உலக கோப்பை வருவதற்கு முன்பு பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணி தோற்றது.

Story first published: Sunday, June 9, 2024, 15:41 [IST]
Other articles published on Jun 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+