Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: இந்திய அணி பிளேயிங் லெவனில் 2 மாற்றம்? பாகிஸ்தான் உடனான போட்டியை எந்த சேனல்,ஒடிடியில் காணலாம்

கொழும்பு: ஐசிசி டி20 உலககோப்பை 2026 தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று ஞாயிற்றுகிழமை கொழும்பு நகரில் நடைபெறுகிறது. டி20 உலககோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 8 முறை மோதிய நிலையில், இதில் இந்திய அணி 7 முறையும், பாகிஸ்தான் அணி 1 முறையும் மோதியுள்ளன. இந்தப் பரபரப்பான போட்டிக்கு, இந்திய அணி நிர்வாகம் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் நமீபியா ஆட்டத்தை தவறவிட்ட உலக நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா குணமடைந்து, சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.ஆசியக் கோப்பை 2025-இல் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய அபிஷேக், இம்முறை கொழும்பில் ஒரு பெரிய ஸ்கோர் அடித்து, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி சாதனையை 8 ஆக உயர்த்த காத்திருக்கிறார்.

அபிஷேக் ஷர்மாவுடன், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. முதல் இரண்டு குரூப் ஏ போட்டிகளில் பெஞ்சில் இருந்த குல்தீப், சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குல்தீப் யாதவுக்காக யார் நீக்கப்படுவார் என்பதே தற்போது முக்கிய விவாதமாக மாறி இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்காத ரிங்கு சிங்குக்கு பதில் குல்தீப் இடம்பெறும் வாய்ப்பும் உள்ளது.குல்தீப் இணைவது, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தியுடன் இந்திய சுழற்பந்துத் தாக்குதலுக்கு மேலும் பலம் சேர்க்கும். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் மைதானத்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி, குல்தீப் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் உடற்தகுதியுடன் இருந்தாலும், குல்தீப் யாதவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதால், ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினமே. இந்தப் போட்டியில் டாஸ் இந்திய நேரப்படி மாலை 6.30 போடப்படும். போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 போட்டிக்கு இந்தியாவின் சாத்தியமான ஆடும் லெவன்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

Story first published: Sunday, February 15, 2026, 6:30 [IST]
Other articles published on Feb 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+