Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK - 105 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான்.. இந்திய வீராங்கனைகள் அபார பந்துவீச்சு

மும்பை : மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி இருக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பாட்டினை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறிய பாகிஸ்தான் வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முயற்சித்தனர். ஆனால் இந்திய வீராங்கனைகள் கட்டுக்கோப்பாக பந்து வீசி பாகிஸ்தானுக்கு ரன் அடிக்கும் வாய்ப்பைக் கொடுக்காமல் இருந்தனர்.

t20 world cup 2024 ind w vs pak w india women

முதல் ஓவரிலேயே இந்திய வீராங்கனை ரேணுகா அபாரமாக பந்துவீசி பாகிஸ்தான் வீராங்கனை பெரசா விக்கெட்டை டக்அவுட் ஆக்கினார். இதேபோன்று சித்ரா ஆமீன் 8 ரன்களிலும், உமைம்மா சோகையில் மூன்று ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க முனிபா அலி 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 52 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

குறிப்பாக இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி நான்கு ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று ஸ்ரேயங்கா பாட்டில் நான்கு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனால் பாகிஸ்தான் அணி கடுமையாக தடுமாறியது.

இறுதியில் நடுவரிசையில் நீடா தர் என்ற வீராங்கனை மட்டும் பொறுப்பாக விளையாடிய 34 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். அவருக்கு கேப்டன் ஃபாத்திமா சனா 13 ரன்கள் எடுத்து துணை நின்றார்.
இறுதியில் சைதா அரூப் 14 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி தட்டு தடுமாறி 20 ஓவர்கள் எதிர்கொண்டு 105 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து இந்த இலக்கை இந்திய அணி மிக விரைவாக எட்டி நாள் மட்டுமே ரன் ரேட் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் இந்திய அணி கடைசி இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் இரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே அரையறுதிக்கு செல்ல முடியும்.

Story first published: Sunday, October 6, 2024, 17:43 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+