For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் இவ்ளோ ரன் அடிக்க காரணமே அந்த சம்பவம் தான்.. அதுக்கப்புறம் தான் மாறினார்.. சேவாக் ஓபன் டாக்

டெல்லி : ரோஹித் சர்மா ரன் மெஷினாக மாறி இன்று கிரிக்கெட் உலகை கலக்கி வருகிறார். அதற்கு காரணமே 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் தான் எனக் கூறி இருக்கிறார் வீரேந்தர் சேவாக்.

தற்போது ரோஹித் சர்மா உச்சகட்ட பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். 2023 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் போட்டியில் அதிரடி சதம் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ள ரோஹித் சர்மா, உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன் அவர் ஃபார்மில் இல்லை எனக் கூறி அணியில் இருந்தே நீக்கப்பட்டார்.

IND vs PAK : This is how Rohit Sharma got motivation to become a big run scorer

அந்த சம்பவத்தால் அப்போது மனமுடைந்து போனார் ரோஹித் சர்மா. 2011 உலகக்கோப்பை தொடருக்கு முன் திடீரென அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை கேப்டன் தோனி மற்றும் தேர்வுக் குழு எடுத்தது.

அதற்கு காரணம், அப்போது அணியில் ஆல் - ரவுண்டர் தேவை என்பதால் யூசுப் பதான் அப்போது சில போட்டிகளில் அதிக ரன் குவித்து இருந்ததால், அவரை தேர்வு செய்தார் கேப்டன் தோனி. உலகக்கோப்பை தொடருக்கு 15 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் ரோஹித் சர்மாவை கைவிட்டது இந்திய அணி.

அந்த சம்பவம் தான் ரோஹித் சர்மா இன்று பெரிய வீரராக மாற காரணம் எனக் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் சேவாக். 2011 உலகக்கோப்பை தொடரில் சேவாக் தொடக்க வீரராக ஆடி இருந்தார். அதனால், அப்போது என்ன நடந்தது என்பதை ஒரு பேட்டியில் கூறினார்.

"நான் கேப்டனாக இருந்திருந்தால் அல்லது தேர்வுக் குழுவில் இருந்திருந்தால், 2011 உலகக் கோப்பைக்கு நிச்சயமாக ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுத்து இருப்பேன். ஆனால் அந்த நேரத்தில் அவர் இப்போது இருக்கும் ரோஹித் சர்மாவாக இல்லை. அவர் இளம் வீரராக இருந்தார். அதனால் அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு கேப்டன் மற்றும் தேர்வுக் குழு அவரை நீக்கும் முடிவை எடுத்தது" என்று வீரேந்திர சேவாக் கூறினார்.

மேலும், "அந்த நீக்கம் அவரை இன்னும் நிலையான வீரராக மாற தூண்டியது. அதனால், அவர் மீண்டும் உலகக் கோப்பையை தவறவிடாத அளவுக்கு அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். உலகக் கோப்பைக்கு 15 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அந்த நேரத்தில், யூசுப் பதான் உலகக் கோப்பைக்கு முன்பு இரண்டு முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடி இருந்தார், அது அவருக்குச் சாதகமாக இருந்ததால், அப்போது ரோஹித் சர்மாவை நீக்க வேண்டி இருந்தது," என்று சேவாக் கூறினார்.

Story first published: Friday, October 13, 2023, 14:29 [IST]
Other articles published on Oct 13, 2023
English summary
IND vs PAK : 2011 World cup snub motivates Rohit Sharma to become a big run scorer says Virender Sehwag.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+