Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திலக், அபிஷேக், துபே வெறியாட்டம்.. உறைந்து போன பாகிஸ்தான்.. ஸ்பின் பிட்ச்சில் இந்தியா மெகா ஸ்கோர்

நிஷின்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டின் தங்கப் பதக்க இறுதிப்போட்டியில், இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சிவம் துபேயின் அதிவேக ரன் குவிப்பால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 வானளாவிய சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசி மைதானத்தை அதிர வைத்தார். வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்தார்.

IND vs PAK Tilak Varma Abhishek Sharma Shine against Pakistan India Posts 211 in Asian Games 2026 Final

இந்திய அணி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்பிளேயிலேயே விக்கெட் இழப்பின்றி 81 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும், அபிஷேக் சர்மா 61 ரன்களிலும், இஷான் கிஷன் 20 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சற்று தள்ளாடியது.

நெருக்கடியான கட்டத்தில் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் சிவம் துபே இணை, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தாடினர். இருவரும் இணைந்து வெறும் 30 பந்துகளில் 62 ரன்கள் குவித்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிவம் துபே 15 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் வெறித்தனமாக ஆடிய திலக் வர்மா, வெறும் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அக்‌சர் படேல் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அஹ்மத் தானியல் மற்றும் அராபத் மின்ஹாஸ் தலா 2 விக்கெட்டுகளையும், சைம் அயூப் மற்றும் அப்ரார் அகமது தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சைம் அயூப் 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கினார்.

கையை ஆட்டி வைபவை குழந்தை என ட்ரோல் செய்த பாகிஸ்தான் வீரர்.. ஆசிய விளையாட்டு பைனலில் என்ன நடந்தது?

கையை ஆட்டி வைபவை குழந்தை என ட்ரோல் செய்த பாகிஸ்தான் வீரர்.. ஆசிய விளையாட்டு பைனலில் என்ன நடந்தது?

தங்கப் பதக்கத்தை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 20 ஓவர்களில் 212 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அக்‌சர் படேல், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பந்துவீச உள்ளதால் இந்தியா தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Story first published: Saturday, October 3, 2026, 11:52 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+