Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் போட்டி அண்டர் 19 ஆசிய கோப்பையில் எப்போது? நேரம், ஒளிபரப்பு மற்றும் அணி பட்டியல்

துபாய்: 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர் இன்று முதல் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் எட்டு ஆசிய அணிகள் பங்கேற்று உள்ளன. 2024 அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

2024 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நவம்பர் 30 அன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டி நடைபெறும் நேரம், மைதானம், எந்த சேனல் மற்றும் ஓடிடி-யில் ஒளிபரப்பாகும் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலும் இங்கே அளிக்கப்பட்டு உள்ளது.

ind vs pak under 19 asia cup 2024 india pakistan


2024 அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டி நவம்பர் 30 அன்று இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது. இது ஒரு நாள் போட்டி ஆகும். ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவிலும். ஒரு நாள் போட்டிகள் வடிவிலும் நடைபெறும். இந்த முறை அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் போட்டிகள் வடிவில் நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை லீக் போட்டியை சோனி லிவ் நிறுவனம் அதன் மொபைல் ஆப் மற்றும் இணைய தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. தொலைக்காட்சியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க விரும்புபவர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

2024 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் குரூப் ஏ வில் வங்கதேசம், இலங்கை. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா. பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடம் பெற்றுள்ளன.

அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா அணி பட்டியல்: ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, சி ஆண்ட்ரே சித்தார்த், முகமது. அமான் (கேப்டன்), கிரண் சோர்மலே (துணை கேப்டன்), பிரணவ் பண்ட், ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (விக்கெட் கீப்பர்), அனுராக் காவ்டே (விக்கெட் கீப்பர்), ஹர்திக் ராஜ், முகமது எனான், கே பி கார்த்திகேயா, சமர்த் நாகராஜ், யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, நிகில் குமார்.

பாகிஸ்தான் அணி பட்டியல்: சாத் பைக் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), முகமது அகமது, ஹாரூன் அர்ஷத், தயப் ஆரிஃப், முகமது ஹுசேபா, நவீத் அகமது கான், ஹசன் கான், ஷாஜாய்ப் கான், உஸ்மான் கான், ஃபஹம்-உல்-ஹக், அலி ரசா, முகமது ரியாசுல்லா, அப்துல் சுபான், ஃபர்ஹான் யூசுப், உமர் சைப்.

Story first published: Friday, November 29, 2024, 16:40 [IST]
Other articles published on Nov 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+