துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் இன்று இந்தியாவை சூப்பர் 4 சுற்றில் மோதுகிறது. t20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தானை 11 ஆட்டங்களில் வீழ்த்தியுள்ள நிலையில், இந்திய அணி மூன்று முறை மட்டுமே தோல்வியை சந்தித்து இருக்கிறது.
கடைசியாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2022 டி20 உலக கோப்பை லீக் சுற்றில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. அதன்பின் துபாயில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக தோல்வி தழுவி வருவது அந்த நாட்டின் மிகப் பெரும் புகைச்சலை ஏற்படுத்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இந்தியா செய்தது பாகிஸ்தானுக்கு உலக மேடையில் பெரும் தலைக்குழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என்பதால் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.
இதன் உண்மை தன்மை தெரியவில்லை என்றாலும், அதற்கான ரகசிய காய் நகர்த்தல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆன மோஷின் நக்வி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்டி பைகிராப்ட் விவாகரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடந்து கொண்ட விதம் குறித்தும் ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
ஐசிசி யின் பல விதிகளை பாகிஸ்தான் மீறி இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் காரணம் காட்டி ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் இன்று இந்தியாவுக்கு எதிராக வெளியேற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி மற்றும் ஐசிசி யின் கண்டிப்பு குறித்து செய்தியாளர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வியிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு இதைப்பற்றி விரிவாக பேசுகிறேன் என்று அவர் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இதனால் இன்றைய ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணி ஏதாவது நாடகத்தில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்திலும் ஜிம்பாப்வே சேர்ந்த போட்டி நடுவரான ஆண்டி பயோகிராப்ட் செயல்படுவார் என கூறப்படுகிறது. ஆண்டி பயோகிராஃப்ட் நீக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை எடுத்திருந்த நிலையில் அதனை ஐசிசி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.