Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்தியாவுக்கு பாதகமாக விழுந்த டாஸ்.. 2 ஆண்டுக்கு பின் திரும்பிய ருதுராஜ், பண்ட் இல்லை

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் ராஞ்சியில் தற்போது தொடங்கி இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

ஒரு மாதத்திற்கு பிறகு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் விளையாடுகின்றனர். அதேபோன்று ராஞ்சி மைதானத்தில் இந்தியா இதுவரை 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால், இது ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது.

ind-vs-sa

இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஏய்டன் மார்க்கரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து பேசிய அவர்,இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் பேட்டிங் செய்வது சுலபமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதே போன்று அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், உலகின் சிறந்த அணியை எதிர் நோக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த போட்டியில் பவுமா, கேசவ் மஹராஜ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தென்னாப்பிரிக்க அணி நான்கு வேக பந்துவீச்சாளர்களை பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல், நாங்களும் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்திருந்தோம். இந்த தொடருக்கு நாங்கள் நல்ல முறையில் தயாராகி வருகின்றோம். அணியில் உள்ள வீரர்களின் எனர்ஜி நன்றாகவே இருக்கின்றது. பல புது வீரர்கள் அனைத்து திரும்பி இருக்கிறார்கள்.

நாங்கள் களத்தில் சந்தோஷமாக விளையாட வேண்டும் என்று நினைக்கின்றோம். இதை தான் நாங்கள் ஒவ்வொரு முறையும் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஒருநாள் கிரிக்கெட்டில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.இன்று ருதுராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். பந்த் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கிறது.

Story first published: Sunday, November 30, 2025, 13:18 [IST]
Other articles published on Nov 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+