Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ருதுராஜ்க்கு லக்கே இல்ல.. CSK கேப்டனுக்கே ஆப்பு வைத்த சக வீரர் பிரவீஸ்.. வேற லெவல் கேட்ச்

ராஞ்சி: தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்திருந்தார். கடைசியாக இவர் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார்.

அதன் பிறகு தற்போது தான் அவருக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கில் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து இந்த வாய்ப்பு ருதுராஜ்க்கு கிடைத்தது இந்திய ஏ அணியில் களமிறங்கி ருதுராஜ், நல்ல ஃபார்மில் இருந்தார். இதனால் தமக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பினர்.

Ruturaj Gaikwad

எப்போதும் தொடக்க வீரராக விளையாடும் அவருக்கு இந்த அணியில் நான்காவது வீரராக இடம் தரப்பட்டது. இருப்பினும் அதையும் ஏற்றுக்கொண்ட ருதுராஜ் முதல் ஒருநாள் போட்டியில் கோலியுடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து லாவகமாக விளையாடி வந்தார். இந்த நிலையில் பார்ட்மன் வீசிய ஒரு பந்தை ருதுராஜ் ஷார்ட் அடித்தார்.

அந்த பந்து பவுண்டரிக்கு போகும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் பிரவீஸ் அதனை சூப்பர் மேன் போல் பாய்ந்து ஒற்றை கையால் பிடித்து அசத்தினார். இதனால் அப்படியே ஷாக் ஆகி ருதுராஜ் நின்றார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கவாஸ்கர், ருதுராஜ் மீது தவறே இல்லை என்றும் அவருக்கு கொஞ்சம் கூட லக்கே இல்லை என்றும் கூறியிருந்தார்.

பிரவீஸ் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தி விட்டதாகவும், அவர் பாராட்டி உள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், இரண்டு வீரர்களுமே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தான் விளையாடுகிறார்கள் என்றும் தனது கேப்டனுக்கு சிஎஸ்கே வீரரான பிரவீஸ் கேட்ச் பிடித்து ஆப்பு அடித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ருதுராஜ்க்கு கொஞ்சமாவது லக் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, November 30, 2025, 16:17 [IST]
Other articles published on Nov 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+