Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: டர்பன் பிட்ச் ரிப்போர்ட்.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? ஆட்டம் எப்போது தொடங்கும்?

டர்பன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை டர்பன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி தொடங்கும் நேரம், எந்த சேனல் மற்றும் ஓடிடி-யில் நேரலையில் பார்க்கலாம் மற்றும் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளலாம்.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டிக்கு பின் இரு அணிகளும் முதல்முறையாக நேரடி மோதலில் ஈடுபடுகின்றனர். இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ind vs sa suryakumar yadav hardik pandya

இதன் முதல் போட்டி டர்பன் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இதுவரை இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளில் இந்திய அணி 15 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 11 போட்டிகளிலும் வென்றுள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடந்துள்ள 15 போட்டிகளில் இந்திய அணி 9 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.

டர்பன் மைதானத்தை பொறுத்தவரை இதுவரை நடத்தப்பட்டுள்ள 18 போட்டிகளில் 9ல் முதல் பேட்டிங் ஆடிய அணியும், 8ல் 2வது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. டர்பன் பிட்ச் ஸ்லோவாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகள் 188 ரன்களை சராசரியாக விளாசியுள்ளது. அதேபோல் 2வது பேட்டிங் செய்த அணிகள் 167 ரன்களை சராசரியாக குவித்துள்ளது. இந்த மைதானத்தில் வேகம் மற்றும் பவுன்ஸ் நன்றாக இருக்கும்.

இதனால் ஸ்பின்னர்களை விடவும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி நேரடியாக சேஸிங் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை போலவே டி20 போட்டியை கண்டு ரசிக்க முடியும்.

மேலும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்க முடியும். அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை ஜியோ சினிமாஸ் செயலியில் நேரலையில் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தலைமையின் கீழ் விளையாடுவதால், கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, November 7, 2024, 22:21 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+