Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 விசயங்களில் சொதப்பிய ரிஷப் பண்ட்.. தோல்விக்கு காரணமாக அமைந்தன.. தப்பிக்குமா இந்திய அணி

டெல்லி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் முதல் முறையாக கேப்டன் பதவியை ஏற்றார்.

இந்திய அணி 212 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தும் தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

தென்னாப்பிரிக்க அணி முழு பலத்துடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.ஆனால் இந்திய அணியில் விராட், ரோகித், ராகுல், பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகிய யாரும் இடம்பெறவில்லை.

பெரிய தாக்கம்

பெரிய தாக்கம்

இருப்பினும் பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் இல்லாதது பெரிதாக எதிரொலிக்கவில்லை, ஆனால் பந்துவீச்சில் பும்ரா இல்லாதது தாக்கத்தை ஏற்படுத்தியது, இந்த நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட் சில தவறுகளை செய்தார். முதல் போட்டி என்பதால், இதனை பெரிய குறையாக எடுத்து கொள்ள கூடாது என்றாலும் எதிர்காலத்தில் சரி செய்து கொள்ள வேண்டும்.

பதறிய ரிஷப்

பதறிய ரிஷப்

கேப்டன் எப்போதும் எந்த சூழலிலும் பதற்றம் அடைய கூடாது. சூறாவளியில் கப்பல் சிக்கும் போது, கேப்டனே பயந்து பதறினால் மற்றவர்கள் நிலை என்ன ஆவது? நேற்று எதிரணி வீரர்கள் ரன்களை அடிக்க தொடங்கியதும் ரிஷப் பண்ட் கொஞ்சம் டென்ஷன் ஆனது நன்றாகவே தெரிந்தது. பதறிய காரியம் சிதறும் என்ற சொல்லுக்கு ஏற்ப, டென்ஷன் ஆனால் எப்படி முடிவு எடுக்க முடியும்.

அறிவுரை வழங்கனும்

அறிவுரை வழங்கனும்

நேற்று அனைத்து பந்துவீச்சாளர்களும் நன்றாக காலை வாரினர். குறிப்பாக ஆவேஷ் கானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் 10 ரன்களுக்கு மேலே கொடுத்தனர். ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலக்கிய ஹர்திக் பாண்டியா, நேற்று ஒரே ஓவரில் 18 ரன்கள் விட்டு கொடுத்தார். இப்படி இருக்க கேப்டனால் ஒன்றும் செய்ய முடியாது என்று அல்ல, பந்துவீச்சாளர்களிடம் திட்டத்தை மாற்று, வேறு மாதிரி பந்துவீசு, பேட்ஸ்மேனிடம் இந்த குறை இருக்கிறது அதை பயன்படுத்தி கொள் என்று எதாவது சொல்லி இருக்கலாம.

ஃபில்டிங் டிரிக்

ஃபில்டிங் டிரிக்

ஃபில்டிங் செட்டப்பில் பெரிய குறை இல்லை என்றாலும், அடிப்படையில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. ஃபில்டிங் செட் டப்பை பார்த்தே அடுத்த என்ன மாதிரி பந்து வரப்போகிறது என்று பேட்ஸ்மேன்கள் கணித்து விடுவார்கள். தோனி போன்ற கேப்டன், அதிலும் ஒரு சின்ன டிரிக் செய்து வீரர்களை நிறுத்துவார். இதனால் பேட்ஸ்மேன்கள் ஏமாந்த ஆட்டமிழந்துவிடுவார்கள். இந்த டிரிக்கை ரிஷப் விரைவில் கற்று கொள்ள வேண்டும்.

Story first published: Friday, June 10, 2022, 11:27 [IST]
Other articles published on Jun 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+