Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. உலக சாதனை படைக்கப்போகும் இந்திய அணி.. தென்னாப்பிரிக்க தொடரில் மாஸ்!!

டெல்லி: தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் இந்திய இளம் படை பிரமாண்ட சாதனையை படைக்கவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி நாளை ( ஜூன் 9 ) 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.

நாளை நடைபெறும் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது.

Recommended Video

IND vs SA முதல் T20 போட்டியில் India பிரமாண்ட சாதனை படைக்க வாய்ப்பு| *Cricket
 முதல் டி20

முதல் டி20

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில், கே.எல்.ராகுல் தலைமையில் புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நீண்ட நாட்கள் கழித்து கம்பேக் தந்துள்ளனர்.

பிரமாண்ட சாதனை

பிரமாண்ட சாதனை

இந்நிலையில் இந்த புதிய படை தான், தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் பிரமாண்ட சாதனை படைக்கவுள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 12 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே கண்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், சர்வதேச டி20ல் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும்.

பங்கு போட்ட ஆஃப்கான்

பங்கு போட்ட ஆஃப்கான்

கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானுடன் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, அதன்பின்னர் ஸ்காட்லாந்து, நமிபியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளுடன் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற பட்டியலில் 12 வெற்றிகளுடன் ஆஃப்கானிஸ்தானை இந்தியா சமன் செய்துள்ளது. நாளை இது மாறுகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

இந்த பிரமாண்ட சாதனையை இந்திய அணி எந்த ப்ளேயிங் 11 உடன் படைக்கவுள்ளது என்ற கணிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், உம்ரான் மாலிக்/ ஆவேஷ் கான்

Story first published: Wednesday, June 8, 2022, 11:19 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+