Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: துருவ் ஜூரல் கண்டிப்பாக விளையாடனும்.. பதிலாக இந்த வீரரை தூக்குங்க.. அஸ்வின் கருத்து

கொல்கத்தா: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்பட வேண்டும் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதனை தற்போது பார்க்கலாம்.அதில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அக்சர் பட்டேல் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அக்சர் பட்டேல் பேட்டிங் பெரியதாக யாராலும் பாராட்டப்படுவது கிடையாது. ஆனால் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் பிளேயிங் லெவனில் இருந்தால் கண்டபடி பந்துவீச்சு முறையில் மாற்ற வேண்டி இருக்கும்.

R Ashwin

கடந்த தொடரில் கூட பவுலர்களை சுழற்சி முறையில் கேப்டன் கில் சரியாக பயன்படுத்தவில்லை. சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஓவர்களை தொடர்ந்து வழங்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை சுழற் பந்துவீச்சாளர்களால் தொடர்ந்து குறைந்த ஓவர்களை மட்டும் வீசினால் விக்கெட்டு எடுக்க முடியாது.

டெஸ்ட் கிரிக்கெட் அவ்வாறு செயல்படாது என்பதை இதில் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஐந்து பவுலர்கள் அணியில் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இதனால் ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து தான் முடிவு செய்ய வேண்டும். என்னைக் கேட்டால் ஜடேஜா, குல்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கண்டிப்பாக இருப்பார்கள்.

இதனால் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்காது. இதேபோன்று ஆறு பேட்டர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஜடேஜா ஆறாவது இடத்திலும் வாஷிங்டன் சுந்தர் எட்டாவது இடத்திலும் விளையாடுவார். இரண்டு வேகப்பந்துவீச்சாளர் கண்டிப்பாக இருப்பார். அப்படி இருக்கும் போது ஒரு இடம் பாக்கி இருக்கிறது. அதில் துருவ் ஜூரல் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இதன் மூலம் சாய் சுதர்சன் மூன்றாவது இடத்தில் விளையாட முடியும். இதனால் நிதிஷ்குமார் ரெட்டி வேண்டுமா, துருவ் ஜூரல் வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். துருவ் ஜூரல் நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் அவரை பயன்படுத்துவது இந்தியாவில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் கூட துருவ் ஜூரல் அபாரமாக விளையாடினார். தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிராக துருவ் ஜூரல் ஒரே டெஸ்டில் இரண்டு சதம் அடித்திருக்கிறார். எனவே அவருடைய பார்மை சரியாக அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 10, 2025, 22:54 [IST]
Other articles published on Nov 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+