Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: எங்க ஊரு வீரரையா சேர்க்கல.. கம்பீருக்கு கங்குலி வைத்த ஆப்பு.. சுப்மன் கில்லுக்கு சிக்கல்

மும்பை: இந்தியா,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி வெற்றி பெற்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக மாறும்.

இதற்காக இந்திய அணி தற்போது கொல்கத்தாவில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சமி சேர்க்கப்படவில்லை. பெங்கால் அணிக்காக விளையாடி வரும் சமி தனது திறமையை நிரூபித்த பின்பும் அவருக்கு கம்பீர் வாய்ப்பு வழங்கவில்லை.

ind-vs-sa

இது குறித்து ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் ஆன கங்குலி, தனது உடல் தகுதியை நிரூபித்த பின்பும் சமியை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த நிலையில் சமி தேர்வு செய்யப்படாததற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கங்குலி ஒரு பெரிய ஆப்பை வைத்திருக்கிறார்.

பொதுவாக சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போட்டிகளில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தான் அமைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். ஆனால் முகமது சமி சேர்க்கப்படாததால், கங்குலி தனது பவரை பயன்படுத்தி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்திருக்கிறார்.

அதாவது பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தால் விக்கெட்டுகள் கிடைக்கும் படி ஆடுகளத்தை அவரது அறிவுறுத்தலின்படி பெங்கால் கிரிக்கெட் சங்கம் தயாரித்திருக்கிறது. இந்திய அணியில் ரிவர்ஸ் ஸ்விங் கலையை சிறப்பாக செய்வதில் முகமது சமி வல்லவர். தற்போது இருக்கும் அணியில் பெரிய அளவுக்கு யாருக்கும் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வராது.

சிராஜ் மற்றும் பும்ரா ஒரு அளவுக்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ஷமி அளவுக்கு இந்த கலையை யாரும் கைதேர்ந்தவர்கள் கிடையாது. இந்தியாவின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி மூன்று சுழற் பந்துவீச்சார்களை தேர்வு செய்யலாம் என திட்டமிட்ட நிலையில் ஆடுகளத்தை பார்த்தவுடன் கம்பீரும், கேப்டன் கில்லும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

இதனால் முகமது ஷமியை சேர்க்காததால் கங்குலி இப்படி ஒரு ஆப்பை தயார் செய்து விட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்த கங்குலி, ஆடுகளம் சுழற் பந்துவீச்சு சாதகமாக வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் எங்களிடம் கேட்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Tuesday, November 11, 2025, 21:57 [IST]
Other articles published on Nov 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+