Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? தமிழக வீரர்களுக்கு இடம் கிடைக்குமா?

கொல்கத்தா: இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி இடைவெளியே இல்லாமல் அடுத்த பெரிய தொடரில் பங்கேற்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் விளையாடுவார்கள். தற்போது மூன்றாவது இடத்தில் யார் இடம் பெறுவார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.

Ind vs SA 1st Test

சாய் சுதர்சன் அந்த இடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் விக்கெட் கீப்பராக விளையாடி வந்த துருவ் ஜூரல் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பி விட்டதால் ஜூரல் எந்த இடத்தில் விளையாடுவார் என கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் சாய் சுதர்சனே மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என தெரிகிறது. நான்காம் இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்க கூடும். ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்டும், ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் விளையாடுவார்கள். ஏழாவது இடத்தில் துருவ் ஜூரலுக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது.

இதன் மூலம் நிதிஷ்குமார் ரெட்டி பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. எட்டாவது இடத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறக்கூடும். ஒன்பதாவது இடத்தில் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவும் இடம்பெறுவார். 10வது இடத்தில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் விளையாடக்கூடும்.ஒருவேளை ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், துருவ் ஜுரலுக்கு பதில் நிதிஷ்குமார் ரெட்டி விளையாடலாம்.

இல்லையெனில் குல்தீப் யாதவ்க்கு பதில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக ஆகாஷ் தீப் இடம் பெறலாம். இந்திய அணி பிளேயிங் XI கணிப்பு: 1. ஜெய்ஸ்வால், 2. கேஎல் ராகுல், 3. சாய் சுதர்சன், 4. சுப்மன் கில், 5. ரிஷப் பண்ட், 6. துருவ் ஜூரல், 7. ஜடேஜா, 8. வாசிங்டன் சுந்தர், 9. குல்தீப் யாதவ், 10. முகமது சிராஜ், 11. பும்ரா

Story first published: Tuesday, November 11, 2025, 10:16 [IST]
Other articles published on Nov 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+