
வானிலை
போட்டியின் முதல் 2 நாட்களுக்கு அவ்வப்போது மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டி பாதிக்கப்படும். மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள், சென்ஞ்ரியன் அடுகளத்தில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆட்டம் டிராவாகும் வாய்ப்பு குறைவு தான்

டாஸ்
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வென்ற விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு எடுத்தார். விராட் கோலியின் இந்த முடிவு கிரிக்கெட் வர்ணனையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. முதல் ஒரு மணி நேரம் பந்து ஸ்வீங் ஆனாலும், பின்னர் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று விராட் கோலி விளக்கம் அளித்தார். விராட் கோலியின் இந்த முடிவு சரியா தவறா என்று காலம் தான் பதில் சொல்லும்.

இந்தியா பிளேயிங் xi
இந்திய அணியை பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் விவரம் பின்வருமாறு, 1, மாயங் அகர்வால், 2, கே.எல்.ராகுல், 3, புஜாரா, 4, விராட் கோலி, 5, ரஹானே. 6, ரிஷப் பண்ட் 7, அஸ்வின், 8, சர்துல் தாக்கூர், 9, முகமது ஷமி, 10, முகமது சிராஜ் 11,. பும்ரா

தென்னாப்பிரிக்கா xi
தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் 11 பின்வருமாறு 1, டீன் எல்கார், 2, ஏய்டன் மார்க்ரம், 3,பீட்டர்சன், 4,வென் டர் டூசன், 5,பவுமா, 6,குயின்டன் டி காக், 7,வியான் முல்டர், 8.கேஷப் மகராஜ், 9,ரபாடா, 10, லுங்கி நிகிடி, 11,மார்கோ ஜென்சன்


Click it and Unblock the Notifications











