செஞ்சுரியன் : இந்திய அணிக்கு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க இளம் ஆல் - ரவுண்டர் மார்கோ ஜான்சென் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு 84 ரன்கள் குவித்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை பெரிய முன்னிலை பெற விடாமல் தடுக்கலாம் என எண்ணிய இந்திய அணியின் திட்டத்தை தவிடு பொடியாக்கினார் மார்கோ ஜான்சென். முதல் இன்னிங்க்ஸில் அவர் பந்துவீச்சில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

அப்போது அதிக விக்கெட் வீழ்த்த முடியாத விரக்தியில் இருந்தவர், அதற்கும் சேர்த்து பேட்டிங்கில் இந்திய அணியை பழி தீர்த்தார். டீன் எல்கருடன் சேர்ந்து அவர் ஆடிய நிலையான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 163 ரன்கள் பின்தங்கியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் ரபாடா 5 விக்கெட்களும், பர்கர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். மார்கோ ஜான்சென் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தவித்தார். அவர் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
அடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், தென்னாப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்க்ஸில் டீன் எல்கர் அடித்த சதம் காரணமாக முன்னிலை பெற்றது. அடுத்து மூன்றாம் நாள் துவக்கத்தில் 5 விக்கெட் இழந்த நிலையில் தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தொடர்ந்தது.
களத்தில் தேனே எல்கர், மார்கோ ஜான்சென் இருந்தனர். இவர்கள் இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் அடுத்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வருவார்கள் என்பதால் இந்திய அணி நம்பிக்கையுடன் மூன்றவது நாளை தொடங்கியது. ஆனால், ஜான்சென் எதிர்பாராத வகையில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
டீன் எல்கர் 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், ஜான்சென் தொடர்ந்து ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்க்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றது. இதற்கு முக்கிய காரணம், ஜான்சென் சேர்த்த 84 ரன்களும், டீன் எல்கருடேன் அமைத்த கூட்டணியும் தான். பந்துவீச்சில் விட்டதை, பேட்டிங்கில் பிடித்து, இந்திய அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தினார் ஜான்சென்.
அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 131 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்த முறை ஜான்சென் 3 விக்கெட் வீழ்த்தி பந்துவீச்சிலும் தன் முத்திரையை பதித்தார். இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.