Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ரபாடாவை விடுங்க.. இந்த வீரர் தான் இந்திய அணிக்கு ஆபத்தை தருவார்- அபிஷேக் நாயர் கருத்து

கொல்கத்தா: இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியும்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கி இருக்கிறார்.

Ind vs SA 1st Test

இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் உள்ள மைதானங்களில் பேட்டிங்கிற்கும், பவுலிங்கிற்கும் ஒரு ஆடுகளும் நமது வீரர்களுக்கு சவால்களை அளிக்கும் என்றால், அது ஈடன் கார்டன் மைதானம் தான். அங்கு அமைக்கப்படும் ஆடுகளம் நிச்சயம் சவால்களை கொடுக்கும்.

பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி கீப்பர் கைக்கு செல்லும். பந்தும் சீமாகும். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் நிச்சயமாக இந்திய அணியில் உள்ள ராகுல் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு கடும் சவால்களை கொடுப்பார். எனவே ராகுலும், ஜெயிஸ்வாலும் அவர்களை எதிர்கொள்ள தங்களுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இருவருக்கும் இடையே நடைபெறும் சவால்களை காண நான் ஆவலுடன் இருக்கின்றேன். ராகுலும், ஜெய்ஸ்வாலும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு விளையாடுவார்கள். ஒருவர் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். இன்னொருவர் நீண்ட நேரம் நின்று விளையாடுவார் என்று அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

ராகுல் இதுவரை 65 டெஸ்ட் போட்டியில் விளையாடி 3985 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ராகுல் சராசரி 36 என்ற அளவில் உள்ளது. ஜெய்ஸ்வால் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2428 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய சராசரி 51 என்ற அளவில் இருக்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மார்கோ யான்சன் ராகுலை மூன்று முறை வீழ்த்தி இருக்கிறார். 53 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஜெய்ஸ்வால் வெறும் 16 பந்துகளை மட்டுமே யான்சனிடம் எதிர்கொண்டு எட்டு ரன்கள் சேர்த்திருக்கிறார், விக்கெட் அவர் வீழ்த்தவில்லை.

Story first published: Wednesday, November 12, 2025, 13:36 [IST]
Other articles published on Nov 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+